உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

83

முடித்து அடுத்த வாரம் முதல் தவறாமல் அண்ணாவின் பொழிவு நிகழும் என்றார் வள்ளலார். ஆங்கிருந்தோர் “நாங்கள் பல்வேறு இடங்களில் இருந்து இச்சொற்பொழிவு கேட்க வந்துளோம். நீங்கள் பாடலைப் படிப்பதே எங்களுக்கு இன்பமாக இருக்கிறது. சில பாடல்களைச் சொல்லி முடிந்த அளவு விளக்கமும் சொல்லுங்கள்" என வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலை அப்பொழுது நிறைவேற்றினார் வள்ளலார். வழக்கத்திற்கு மேலாக நெடும் பொழுது ஆயிற்று. பாடல் உணர்விலும் பொருள் நயத்திலும் கேட்டவர்கள் கட்டுண்டு திளைத்தனர். அன்று எடுத்துக் கொண்டது பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் புராணம். அப்புராணம் முடிய வள்ளலாரே உரையாற்ற வேண்டுமென வேண்டிக்கொண்டனர். அப்படியே நிகழ்ந்தது. அண்ணனாரும் ஒருநாள் தம்பியார் அறியாவண்ணம் மறைந்திருந்து அவர் சொற்பொழிவைக் கேட்டு உருகினார்; உருகிக் கண்ணீர் சொரிந்தார். தம்பியார் சொல்லிய உரை திருவருளோடு ஒன்றியதாக இருப்பதை எண்ணித் திளைத்தார்.

இவ்வரலாற்றுக் குறிப்பு நம்மை வள்ளுவர்பால் ஈர்க்கிறது. வள்ளுவர் வழங்கிய சொல்வன்மை ஈர்க்கிறது.

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப பொழிவதாம் சொல்”

வள்ளலார் சொல் கேட்டவர்களைப் பிணித்தது; கேளாதவர் களைக் கேட்குமாறு ஏவவும் செய்தது.

பற்றற்ற பான்மை

வள்ளலார் பொருட்பற்று இல்லாதவர். அவர்க்குச் சோமு செட்டியார் பணம் தந்ததுண்டு. அப்பணத்தை வீட்டுக்குக் காண்டு சென்றாரல்லர். வழியிலே எறிந்தார்; குறத்திலே எறிந்தார்; கிணத்திலே எறிந்தார். பொருட்பற்று இல்லாமைக் குறிப்பு இது.

ஒருநாள் ஒற்றியூரில் ஒரு திண்ணையில் படுத்திருந்தார். வள்ளலார் காதில் காதில் 'கடுக்கன்' அணிந்திருந்தார். அந்நாள் வழக்கம் அது. பெற்றோரும் உற்றோரும் தம் ஆண்மக்களுக்கும் அணிகலம் போட்டு அழகு பார்க்கும் காலநிலை அது. அதனால் வீட்டினர் வலியுறுத்துதலுக்காகக் காதில் கடுக்கனை அணிந் திருந்தார். அக் கடுக்கன் மேல், திருடன் ஒருவன் கண் விழுந்தது. திருடன் தம்மை நோக்கி வருவதையும் அவன் நோக்கத்தையும்