உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் -34 34ஓ

இதனால், ஒரு வாழ்விலேயே எழுபிறப்புகள் உண்மையை அவர் குறித்தமை விளங்கும். இவற்றால்

“எழுமைக்கும் ஏமாப் புடைத்து”

என்பதுடன்,

"எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு’

55

என்று வரும் குறளுக்கும் கருத்துத் தெளிவுண்டாம். ஒரு பிறப்புள் அடங்குவதே எழு பிறப்பு என்க. இனி எழுபிறப்பையும் தனித்தனிப் பிறப்பெனவும் சுட்டுவார் வள்ளலார்.

"இந்தக் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அதுபோல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கும் எவ்வேழு பிறப்புண்டு" என்று கூறுகிறார்.

சொல்வன்மை

இந்நாளில், சென்னை இலிங்கிச் செட்டித்தெருவின் கண் உள்ள மல்லிகேசுவரர் திருக்கோயில் முகப்பில் இருப்பது மறைமலையடிகளார் நூல் நிலையம். அதன் மேன்மாடி வள்ளலார் திருவருள் மண்டபம் என்பது. வள்ளலார் தம் இளந்தைப் பருவத்தில் முதன் முதலாகச் சொற்பொழிவு செய்த வீடு, சோமு செட்டியார் என்பார் வீடு. அவ்வீடே இந்நாளில் மறைமலையடிகளார் நூல் நிலையமாகவும் வள்ளலார் திருவருள் மண்டபமாகவும் விளங்குகின்றது.

வள்ளலாரின் அண்ணனார் சபாபதியார் புராணப் பொழி வாளராக அந்நாளில் விளங்கியவர். சோமு செட்டியார் வீட்டில் சனிக்கிழமை தோறும் சமயச் சொற்பொழிவு ஆற்றி வந்தவர். அவர்க்குக் கையேடு படிப்பார் ஒருவர் இருந்தார். அவர் இடை

டை வராமல் இருந்துவிடுவார். அதனால் சபாபதியார்க்கு இடர்ப்பாடாக இருந்தது. தம்பியார் தமக்குக் கையேடு படித்தால் உதவியாமே என எண்ணினார்; தம் மனைவியாரிடம் எண்ணத்தை உரைத்தார். அவர் வேண்டுதலால் தம்பியாரும் இசை சந்து கையேடு படித்து வந்தார்.

இந்நிலையில் ஒருநாள் அண்ணனார்க்கு உடல் நிலை நன்றாக இல்லை; பொழிவுக்குப் போக இயலாமை ஏற்பட்டது. தம்பியாரை அனுப்பிக் கடவுள்வாழ்த்துப்பாடி வழிபாடு செய்து விட்டு வருமாறு வேண்டினார். அவ்வாறே சென்று வழிபாட்டை