உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே” என்பது அப்பாடல்

81

நான் படிக்கும்போது என்னை நான் அறியேன் என்பது என்ன? தானே படிப்பாய் ஆகிய ஒருமை நிலையே அது. நாபடிக்குமாம்; ஊன்படிக்குமாம்; உளம் படிக்குமாம்; உயிர் படிக்குமாம்; உயிர்க்கு உயிரும் படிக்குமாம். ஒருவர் இப்படிக் கற்பாராயின் ஒருமுறை கற்பதன்றி மறுமுறை கற்க வேண்டி நேராது. இதுவே ஒருமைக்கண் கற்கும் கல்வி! ஓதாக்கல்வி!

பொதுநிலையிலே சொல்கிறார் ஒளவையார்:

"வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானைப் -பெண்பாவி பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே எற்றோமற் றெற்றோமற் றெற்று"

"ஒரு வெண்பாவை இருமுறை கேட்டால் மனத்தில் பதிந்துவிட வேண்டுமாம். ஏட்டில் ஒரே ஒரு முறை பார்த்துப் படித்தால் மறுமுறை எழுதிவிட வேண்டுமாம். அவனே மகன்; அவனைப் பெற்றவளே பெற்றவள்" என்கிறார். இதற்குச் சான்றாக விளங்கிய அந்தகக்கவி வீரராகவர், மாம்பழக்கவிச் சிங்க நாவலர் ஆகியவர் களை நாடறியும். "ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப்படித்த விரகன், இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீரராகவன்" என்பது தம்மைப் பற்றி அந்தகக் கவிவீரராகவர் குறித்த செய்தி. இவற்றை நோக்கவும் உலக வரலாற்றை நோக்கவும் வள்ளலார் கற்ற ஓதாக் கல்வி புலப்படும். அது வள்ளுவர் கூறிய, 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி

66

என்பதும் விளங்கும்.

எழுமை எழுபிறப்பு

இவ்விடத்தே 'எழுமை' என்பதையும் எண்ணுதல் நலம். "கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாயிருப்பது ஒன்று; அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று; பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று; குழந்தைப் பருவம் ஒன்று; பாலப்பருவம் ஒன்று; குமரப்பருவம் ஒன்று; விருத்தப்பருவம் ஒன்று -ஆகப்பிறவி -7. இவ்வாறே தாவரம் முதலியவற்றிற்கும் உள” என்கிறார் வள்ளலார்,