உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

என்பதை இந்நூல் காட்டும். திருவாசகம், தேவாரம், திருமந்திரம், பட்டினத்தார், தாயுமானவர் ஆகியவற்றையெல்லாம் எத்துணை ஆழமாகக் கற்றிருந்தார் என்பது "வள்ளலாரும் வாசகரும் என்பது முதலாக வெளி வந்துள்ள நூல்களால் எளிது விளங்கும். ஆதலால் வள்ளலார் நூற்பயிற்சி இல்லார் என்பது தெளிவிலா முடிவாம்.

வள்ளலார் பிறரைப் போல் பல்கால் பயில வேண்டுவது இல்லாமல் ஒருமுறை கற்றாலே அப்படியே வாங்கிக் கொள்ளும் திறத்தொடு இருந்தார் என்பதும், அதுவே ஓதாக் கல்வி எனப்படுவதாம் என்பதும் விளங்கும். திருவள்ளுவர் ஓதாக் கல்வி அமையுமாற்றை "ஒருமைக் கண் தான் கற்றகல்வி" என்கிறார். அக்கல்வி “எழுமையும் ஏமாப்புடைத்து' என்றும் கூறுகிறார்.

ஒருமித்த உணர்வால் ஒருவரால் கற்கப் பெறும் கல்வி அவர்தம் பின்வரும் காலம் அனைத்துக்கும் அழியாப் பொருளாய் அமைந்திருக்கும் என்பது இக்குறளின் பொருளாம்.

ஒருமைக்கண் கற்ற கல்வி என்பது ஒருமை நிலையில் கற்ற கல்வி. எழுமை என்பது பின்னே தோன்றுகின்ற, வருகின்ற என்னும் பொருளது.ஏமாப்பாவது பாதுகாப்பு.

வள்ளலார் ஒருமை நிலையில் கற்ற கல்வியை அவரே உரைக்கிறார்:

“வன்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சான்றினிலே

தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்தென் ஊன்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்னும் இப்பாடலில் திருவாசகத்தைப் பயின்ற வகையைத் தெளிவிக்கிறார். வாசகம் வேறு தாம் வேறு எனல் இன்றி ஒன்றாகக் கலந்து விட்டதும் அக்கலப்பு ஊன் கலப்பாய் உயிர்க் கலப்பாய் அமைந்து ஒன்றி விட்டதையும் குறிப்பிடுகிறார். இதுவே ஒருமைக் கல்வி அல்லது ஓதாக் கல்வியாம்!

இதனைச் சுந்தரர் தேவாரத்தைச் சுட்டுமுகத்தான் மேலும் தெளிவு செய்கிறார் வள்ளலார். அதனைத் தம் அனுபவம் என்றும் வரையிட்டும் உரைக்கிறார்.

“தேன்படிக்கும் அமுதாம்நின் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாவொன்றோ