உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

79

ஊரார் அனைவரும் வந்து உரிய சுவை கெடாமல் உண்டு செல்லும் இந்நாளிலும், திருடர் எனத் தலை மறைந்து புறவாயில் வழியே புகுந்து ஆறி அலர்ந்து போன உணவை உண்ணும் நிலைமை உண்டாயிற்றே என்பதை எடுத்துரைத்தார். அண்ணனார் விருப்பப்படி வீட்டிலேயிருந்தேனும் கற்குமாறு வேண்டினார். அண்ணனார் கண்டிப்பில் உண்டாகாத திருப்பம் அண்ணியார் கண்ணீரால் உண்டாயிற்று! அன்று தொட்டு மாடியில் இருந்த சிற்றறையில் இருந்து கற்கத் தொடங்கினார் வள்ளலார். அக்கால் அவர்தம் அகவை ஒன்பதேயாம்.

"ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட அருட்கடலே”

என்றும்,

“ஆறொடு மூன்றாண் டாவதிலே முன்னென்னை ஆண்டாய்” என்றும் கூறுவார் வள்ளலார்.

உயிர்க் கல்வியாம் உருக்கக் கல்வித் தூண்டலிலே உருவாகிய கல்வி வள்ளலார் கல்வி என்பதை உணர்தல் வேண்டும். இனி அண்ணனாரும் கற்கவே கட்டளையிட்டார். அண்ணியாரும் அதையே சொன்னார். ஆனால் வள்ளலார் உள்ளம் அண்ணியார் உரையை ஏற்றுப் போற்றியது ஏன்? அண்ணியார், வள்ளலார் உள்ளம் உணர்ந்து அவர் உணர்வொடு கலந்து அவர் ஏற்குமாறு இனிய மெல்லிய நயத்தகு மொழியால் கூறினார். வள்ளுவர் உரைப்படி “நிரந்து இனிது" சொன்னார். அதனால் வள்ளலார் "விரைந்து" ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியை "அன்பிற்கும் உண்டோ" என்னும் குறளுடன்,

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்”

என்னும் குறளும் இ ணைத்து நோக்கத் தக்கதாம். ஓதாக்கல்வி

'ஓதாக்கல்வி' வள்ளலார் கற்றகல்வி என்பதைப் பலரும் அறிவர். 'ஓதாக்கல்வி' என்ற தொடர் தோன்றியதும், நினைவுக்கு வருபவரும் வள்ளலாரே! வள்ளுவரும் அக்கல்வியைக் குறித் துள்ளாரா? என்னும் வியப்பும் வினாவும் பலர்க்கும் எழும்பும்.

வள்ளலார் நூற்கல்வி கல்லார் அல்லர்; நன்கு கற்றவர்; இதனை அவரியற்றிய பாடல்கள் வெட்ட வெளியாகக் காட்டுகின்றன. திருக்குறளை எவ்வளவு ஆழ்ந்து கற்றுளார்