உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

87

வள்ளலார் ஏன் சுவாமிகளைக் காண விரும்பினார்; சுவாமிகள் ஏன் முந்து நின்றார். இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். அவ்வாறே அளவளாவி மகிழ்ந்தனர்.

"அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று"

என்பது திருக்குறள். அளவளாவுதல் கட்டாயமானது. அளவளாவுதல் இல்லாதவன் வாழ்வு, கரையில்லாக் குளத்தில் நீர் நிறைந்தது போல்வது! கரையில்லாக் குளத்தில் நீர் நிற்கவே செய்யாதே! நிறைவது எப்படி? ஆதலால் இல்லாத பொருளை உவமை கூறியதாயிற்று! இல்லாத வாழ்க்கையை இல்லாத கரையுடைய குளத்து நீர்க்குக் கூறி வாழ்க்கை இன்மையைத் தெளிவாக்குகிறார் வள்ளுவர். அளவளாவுதலால் கரையுள்ள குளத்தில் பெருகிய நீரென வளமாக்கிக் கொண்டார் வள்ளலார். "ஏரிநிறைந் தனைய செல்வன் கண்டாய்”

என்பது நாவுக்கரசர் நன்மொழி.

அருளாட்சி

மஞ்சக் குப்பத்தில் வட்ட ஆட்சியராக வெங்கடசுப்பு என்பார் இருந்தார். அவர் வள்ளலார் அருளுரை கேட்பதற்காக வருவது வழக்கம். அந்நாளில் வட்ட ஆட்சியர் செல்லுமிடத் திற்கு அவர்க்கு முன்னே ஊதுகொம்பு ஊதிக் கொண்டு போக வேண்டும்.அம்முறையில் விரைந்து செல்லும் வண்டிக்கு முன்னே ஓடிக்கொண்டே ஊதுகொம்புக்காரன் ஊதிக்கொண்டு வந்தான். வந்தவன் ஓடிக் களைத்தும், ஊதி ளத்தும் சோர்வுற்ற

நிலையை அடிகளார் கண்டார். உள்ளம் உருகினார்; வட்ட ஆட்சியர்க்கு முகங்கொடுக்காதவராய்த் தம் உரையின் இடையே ஊதுகொம்புக்காரனுக்கு உணவு தரச் செய்து ஓய்வு கொள்ள உதவி, அதன்பின் அருளுரை தொடங்கினார். அருளுரை முடித்தபின்னரே எவர்க்கும் உணவு வழங்குவது வழக்கம். அவ்வழக்கத்திற்கு மாறாகவே வள்ளலார் அருட்செயல் இருந்தது. அருளுரை முடிந்த பின் வட்ட ஆட்சியரை அழைத்து "எங்கே போக வேண்டும் என்பதை முன்னரே சொல்லி ஊதுகொம்புக் காரனை முன்னே போயிருக்கச் செய்துவிட்டுப் பின்னே சென்றால் அவனுக்கு இவ்வளவு களைப்பும் இளைப்பும் ஏற்படாவே! இந்தப் பதவி எவ்வளவு நாளைக்குத்தான் இருக்கக் கூடியது என்று இரங்கிக் கூறினார்.