உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

கண்டாமணிகள் அதிர்வேட்டுகள் முதலிய ஆரவாரங்களுடன் முரணான முறையில் நடந்து கொண்டு வருவதை அந்தத் திருவுளந்தான் தடுத்துச் சன்மார்க்க முறையில் நடைபெற அருளுமாறு நாமெல்லோரும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோமாக" என்பது அது (119).

ஆகுல நீர நிலைக்குப் போய் விட்ட சன்மார்க்க சபை பற்றித் திரு.வி.க. வருந்தி உரைக்கிறார். இராமலிங்கர் திருவுள்ளங் கண்ட அப்பெருந்தகை உரையையேனும் சன்மார்க்க உலகம் ஏற்றுக் கொண்டதா?

.

'இற்றைக்குச் சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ்நாட்டில் வதிந்து மறைந்த நம் இராமலிங்க சுவாமிகள், சாதிமத வேற்றுமைகளைப் பலவுரையால் மறுத்துச் சமரச் ஞானத்தை அறிவுறுத்திக் கோயில்களெல்லாம் சாதிக் கோயில் களாக மாறியது கண்டு எல்லாரும் போந்து வழிபடுவதற்கென இச்சமரசக் கோயிலை அமைத்துச் சென்றார். இங்கே யாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியில் இருக்கிறதா? ஈங்கும் சாதிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்கைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது?

“எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் சோதி”

என்று சுவாமிகள் அருளிச் செய்துள்ளார். இச்சபை அந் நோக்குடன் சுவாமிகளால் நிறுவப்பட்டது. இஃது இப்பொழுது எல்லா நாட்டினர்க்கும் எல்லா மொழியினர்க்கும் எல்லாச் சமயத்தவர்க்கும் பயன்படுகிறதா?

எல்லாச் சாதியார்க்கும் பொதுவாகப்

"எச்சமயத்தவரும் வந்திறைஞ்சா நிற்பர்" என்று தாயுமான சுவாமிகள் சிதம்பரத்தின் பொதுமை தெரிந்துப் போந்தார். இப்பொழுது சிதம்பரத்தில் எல்லார்க்கும் இடமுண்டா? தாயுமானவர் காலத்தில் பொதுவுடைமையாகக் கருதப்பட்ட சிதம்பரம், இப்பொழுது சிலருடைமையாகவே கருதப்படுகிறது.

"அக்கொடுமை கண்டே இராமலிங்க சுவாமிகள் இங்கு இச்சபைக் கோயிலை நிறுவினார். இதுவும் தன் பொதுமையை இழந்து நிற்கிறது. பெரியோர் கொள்கையை கொள்கையை வீழ்த்தி அவர்தம் உருவத்துக்கு மட்டும் நம்மவர் விழாக் கொண்டாடுகின்றனர். இக் கொடுமையை யாண்டுச்சென்று