உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

105

முறையிடுவது? ஆண்டவனே! உன்னிடத்திலேயே முறையிடு கின்றேன். வேறு களைகண் இல்லை. என் நாட்டார்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்துவாயாக" (இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்

34-35).

1929 ஆம் ஆண்டிலே திரு.வி..க. வேண்டிக் கொண்ட வேட்கை மொழிகள் இவை.

-

-

எது சமரசத்திற்கு பொது நிலைக்கு என அமைக்கப் பட்டதோ அது சமரசத்தை இழந்தது. இருக்கும் சிதம்பரத்தை விடுத்து எதற்காகப் புதிய சிதம்பரத்தை (உத்தர ஞான சிதம்பரத்தை) வள்ளலார் அமைத்தாரோ அதுவும் அச் சிதம்பர நடை நடந்தால் பயனென்ன?

கொலை கொள்ளை என்பவற்றை ஒழிக்கவே பாடுபட்ட பெருமான் கண்ட நிலையத்தின் நிலையே "இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது?" என ஏங்குமாறு ஆயிற்றே!

"பெரியோர் கொள்கையை வீழ்த்தி அவர்தம் உருவத்துக்கு மட்டும் நம்மவர் விழாக் கொண்டாடுகின்றனர். இக்கொடுமையை யாண்டுச் சென்று முறையிடுவது?" என்று வேகின்றாரே திரு. வி.க! இந்நிலை வள்ளலார் கண்ட திருக்கோயிலை விட்டு இன்றேனும் நீங்கிற்றா? அதே தொடர்கதை! வள்ளுவர் திருக்கோயிலாகத் திகழும் திருக்குறள் கொள்கைகளுக்கும் அதே நிலை; அதே தொடர்கதை!

ஒளி வழிபாட்டுக்கெனவே அமைக்கப்பட்ட அத்திருக் கோயில் 'ஞானானந்தவல்லி சமேத ஆனந்த நடராஜப் பெருமானும் தனிப் பெருங்கருணா நாயகி சமேத அருட் பெருஞ் சோதீஸ்வரரும் வெள்ளியம்பலநாதர் பொன்னம்பலநாதரும் எழுந்தருளியிருக்கும் தேவஸ்தானமாகிய சத்திய ஞானசபை என 1893 ஆம் ஆண்டிலேயே ஆக்கப்பட்டுவிட்டது. அடிகளார் திருவுருக்கரந்து ஒன்பதே ஆண்டுகள்! அதற்குள் இவ்வளவு மாற்றங்கள்! இது நடந்து தொண்ணூறு ஆண்டுகள் கடந்து

விட்டனவே!

<<

வடலூரில்

செய்யவேண்டுவன

பற்றித் தவத்திரு ஊரனடிகள் உன்னிப்பாக உணர்ந்து வடலூர் வரலாற்றில் வரைகின்றார் அவற்றில் சில குறிப்புகள்:

"அடிகள் நிறுவிய நிலையங்கள் சமயஞ் சார்ந்தவை அல்ல.

சமயங் கடந்தவை.