உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைந்து நினைந்து

“உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே' - புறநானூறு “பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது - மணிமேகலை "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" - திருக்குறள்

தஞ்சை வள மண்ணின் வளங்களுள் ஒன்றாகத் திகழ்வது அருட்பெருஞ்சோதி ஆலயம்! நாளும் பொழுதும் கிழமையும் திங்களும் மண்ணின் வழியும் விண்ணின் வழியும் வள்ளலாரியம் பரப்பி வரும் அருள்நிலையம்!

கொள்கை பரப்பு என்பது சொல்லால் அமைவதா? செயலும் சேர்வதே! செறிவதே! திங்கள் ஒன்றுக்கு ஓரிலக்கம் செலவிட்டுப் பசித்தோர் முகம் பார்த்து வழங்கிப் புசித்தோர் முகம் பார்த்து மகிழ்ந்து, தொடர்ந்து போற்றி வரும் அருளற நிறுவனம் அது. நிறுவனம், வள்ளலார் வழி வாழ்வே வாழ்வெனக் கொண்டு தாமும் தம் குடிமையும் வள்ளலாரிய வாழ்வுக்கே, ஈட்டுவ எல்லாம் ஈதலால் காட்டுவ தெனக் கொண்ட அருளாளர் தம்பையா அவர்கள்! சித்த மருத்துவச் செம்மல்! ஆன்ம நேய அருமையர்!

எளியேனை வள்ளலாரியத்தில் தோய்த்து தோய்த்து பொழியச் செய்து வரும் தோன்றல்! தஞ்சை, சன்மார்க்க சபைக்கும் ஆதிபகவன் ஆலயத்திற்கும் அணுக்கராக அமைந்து எளியேனையும் அணுக்கள் ஆக்கி வரும் புகழும் வேண்டாப் புகழாளர்! பொழிவுச் செய்தி வான் பொழிவு போல் கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டில் வெளிவரப் பெருங்கொடை வழங்கிய புகழின் இருக்கையர்!

அவர்தம் ஆழங்கால் பட்ட தொண்டை நினைந்து நினைந்து நேயப் பரிசிலாக இப்பதிப்பு வெளிப்படுகின்றது!

இன்ப அன்புடன், இரா.இளங்குமரன்