உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வரவு

வள்ளல் பெருமான் வரவால் வையக

வரவாகிய

வளப்பொருள்கள் பல. அவற்றுள் சன்மார்க்கம், ஓதாக்கலை, சாகாக் கலை என்னும் மூன்றும் முதல் வரிசையில் நிற்பவை. அவராலேயே உலகறியக் கண்டு பரப்பப்பட்டவை.

இவை மூன்றும் வள்ளுவத்தின் வழியாகத்தாம் கொண்ட தென்று வள்ளலார் குறிப்பாக உரைத்தாலும், இம்மூன்றையும் சுட்டிய அளவில், வெளிப்பட வள்ளுவர் தோற்றமுறார்! வள்ளலாரே தோற்ற முறுதல் ஒருதலை;

'சன்மார்க்கம்' 'நன்மார்க்கம்' அஃது என்மார்க்கம் என்று உலகறியக் குரல் கொடுத்தவரும் அதனையே வாழ்வின் கடைப் பிடியாகக் கொண்டு உலகம் உய்ய வழிகாட்டியவரும் வள்ளலாரே! அவர்தம் சன்மார்க்கம் ஆகிய பொதுமை அறநெறி உலகில் தோன்றி வராக்கால், இலகும் உலகம் கலக உலகமாகவே காட்டு விலங்காண்டி வாழ்வில் கண்ட கனிவு தானும் இல்லாமல் அழிந்தே போகும்! அணுக்குண்டு, நீரகக் குண்டு, எரியக் குண்டு என்பவை இல்லாமலே சமயம் மதம் சாதி வருணம் என்பவற்றால் அழிபட்டு வரும் அடையாளத்தாலேயே எதிர்கால உலகம் என்ன நிலைக்கு ஆட்படும் என்பது வெளிப்படும்!

ஒரு சமயத்தோடு ஒரு சமயம், ஒரு சமயத்தோடு உட்சமயம், ஒரு சாதியோடு ஒரு சாதி, ஒரு சாதியோடு உட்சாதி, சடங்கு விகற்பங்கள், சார்ந்த நெறிவெறிகள், வெறியே அரசியலாய்க் கோலோச்சும் அழிபாடுகள் என்பவற்றுக்கு, உலகச் சான்றோர் ஒருங்கு கூடி ஒரு தீர்வுகாண வேண்டும் என்று எண்ணினால் உண்மையாகவே ஆய்ந்து முடிவெடுத்தால் அத்தூய ஒப்புரவாம் உலக நெறி வள்ளுவர் வழியில் வள்ளலார் நடைப்படுத்தி நாடறியச் செய்த பொது நெறியாம் சன்மார்க்க நெறியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை!

-

தனை வள்ளலார் வழிஞர் வள்ளலார் ஆய்ஞர் வள்ளலார் பரப்பாளர் - வள்ளலார் தொண்டே வாழ்வாகக் கொண்ட பொதுநிலைப் பொருளர் முதற்கண் உணர வேண்டும்.