உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

என்பதை வள்ளுவர் வழியாகவும் வள்ளலார் வழியாகவும் வையக வாழ்வார்கள் வழியாகவும் காட்டப்படுகின்றது.

சொல்லால் முழக்கல் சொல்லால் மயக்கல் அறிவுப் பரப்பை விரித்துக் காட்டி விழிக்க வைத்தல் புரியாமலே புரிந்ததுபோல் நடித்தல் என்பவை இடம் பெறாமல், கருதியது கருதியவாறே,கண்டது கண்டவாறே ட்டுக் கட்டுதல், இசைத்துக் கோத்தல், கற்பார் என்ன கருதுவர், முன்னை நூலர் என்ன எழுதினர், பின்னை நூலர் என்ன எழுதுவர், என்பவற்றைப் பற்றி எண்ணி மயங்காமல் மறுக்காமல், மனச்சான்றை முன் வைத்தே எழுதப்பட்டவை

வையாம்!

ஒன்று

-

உலக அமைதிப் புரட்சியாளர் வரிசை எண்ணப்படுமானால், எழுதப்படுமானால் முதல் வரிசையில் முதல் ஆளாய் நிற்க வேண்டியவர் வள்ளலாராகவே இருப்பார் என்பது வாய்மை நெஞ்சக் குரலாம்! குமுகாயப் புரட்சிக்கு ஓங்கிக் குரல் கொடுத்த சான்றோர் வரிசை பெரிது! உலகு பெற்ற உயர்வற உயர்ந்த அவ்வரிசையில் ஓரிடம் தானும் பெறாமை, வள்ளுவர் வள்ளலார் கொள்கைக் குறையன்று! அக்கொள்கையைப் பரப்பாத தமிழர் குறையே குறையாம். அதனைச் செய்தலை ன்றேனும் கொள்ளல் அறப்பணியாம்.

உலக

என் உள்ளிருந்து கோலோச்சுவாருள் வள்ளுவர்க்கும் வள்ளலார்க்கும் தனிப் பேரிடம் உண்டு. அதன் வெளிப்பாடு என் நெஞ்சறி சான்றும் எழுத்துச் சான்றும் மட்டுமல்ல, தஞ்சைமண் என் வாய்மொழிச் சான்றையும் வளமாக அறியும்.

குறள் அடிகளார் அமரர் பழநிமாணிக்கனார் முன்னின்று உலகத்திருக்குறள் பேரவையும் வள்ளலார் மன்றமும் இணைந்து நடத்தும் வள்ளலார் விழாக்கள்! பலவற்றில் எளியேன் பொழிவுகள் நிகழச் செய்வித்தார்! இதுகால் அவர் வழியே வழியெனக் கொண்ட அருமைத் தோன்றல் பழ.மாறவர்மனார் அத்திருத்தொண்டில் தொடர்ந்து துலங்குகிறார்.

பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய பெருமகனார் அருட்பெருஞ்சோதி நிறுவனம்-அகத்தியர் ஆலயம் - நிறுவனர். அருள் தொண்டர் மரு. தம்பையா அவர்கள், பல்கால் வள்ளலார் வழியில் ஊறித் திளைத்து யான் உரையாற்ற உதவியுள்ளார். அவரை நேயத்தால் நினைந்து நினைந்து மகிழ்கிறேன்.