உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வள்ளலார் கண்ட சாகாக்கலை அல்லது

மரணமிலாப் பெருவாழ்வு

தோற்றம் ஒடுக்கம்

அரும்பு, முகை, மொக்கு, மலர், அலர், வீ, செத்தை, செதும்பு என்பவை மலரின் பல பருவ நிலைகள்.

தளிர், துளிர், கொழுந்து, முறி, இலை, பழுப்பு, சருகு என்பவை இலையின் பல பருவ நிலைகள்.

கரு, பீள், குழவி, மக, பைதல், குமரம், கட் டிமை, வாலியம், முதுமை, பெருமுதுமை என்பவை மக்கட் பிறவியின் பல்வேறு நிலைகள்.

இவை எங்கும் என்றும் இயற்கை வளர்நிலையாய் அமைந்து காணக்கிடப்பவை.

தோன்றுவன வெல்லாம், வளரும் முதிரும் முற்றும் முடியும் என்பதை அறியக் காட்டுவனே

அவை.

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரி வரை தோற்றமும் மறைவும் ஆகிய மாறும் இயற்கையை மாறாது கொண்டவை என்பதை விளக்குவன.

நிலையாமை

இந்த உலகம் நிலையாமையை நிலைபேறாகக் கொண்டது.

“நில்லா உலகம் புல்லிய நெறித்தே" - தொல்காப்பியம்

"நில்லாத வற்றை நிலையினை என்றுணரும்

புல்லறி வாண்மை கடை” - திருக்குறள்

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு" திருக்குறள்

-

“நின்றான் இருந்தான் கிடந்தான் தன்கேளலறச் சென்றான்"

-

நாலடியார்