உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் -34 34ஓ

ச்சித்தர்களின் ஒடுக்கங்கள் சில உள்ளமையும், தனி வழிபாட்டு நிலையங்களாக இருப்பதையும் காணலாம். சித்தர் ஒடுக்கங்கள் சிவலிங்க வழிபாடாக நிகழ்தலும் அறியத் தக்கது இறைநிலை எய்திய இவர்கள் இன்றும் வாழ்வாராகவே மக்களால் எண்ணிப் போற்றப்படுகின்றனர். இனி, அறநூல்கள் சிலரைச் 'சாவா உடம்பினர்' எனப் பாராட்டுதல் அறியத் தக்கது. சாவா உடம்பினர் :

"எக்காலும் சாதல் உறுதியே" என்கிறது அறநெறிச் சாரம் (119) சாவாத இல்லை, பிறந்த உயிரெல்லாம்" என்கிறது நான்மணிக்கடிகை. (79). திரிகடுகம்,

"மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில் சீர்ப் பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும்-உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய் தினார்"

என்கிறது (16) வான் (உயர்ந்த) புகழ் நட்டான் 'சாவான்' 'சாகமாட்டான்' நன் மனைவியுற்றான் சாவான்; உண்ணுநீர்க் கேணி தோண்டி உதவினான் சாவான் எனப் பட்டியல் போட்டுக் காட்டுகின்றது. அன்றி, 'சாவான்' என்னாமல் சாவா உடம்பு எய்தினார் என்கிறது. அவ்வுடம்பு பூத உடம்பு அன்று; 'புகழ் உடம்பு' என்பது தெளிவாம்.

புகழுடம்பு உண்டாகும் வகையையும் அவ்வுடம்பு பரவி நிலைபேறு ஆதலையும் ஏலாதி இயம்புகிறது (63)

“ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்

பேணொடும் எண்ணும் எழுத்துமிவை - மாணொடு கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈந்தார் இம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து"

என்பது அது.

கேட்டும் எழுதியும் ஓதியும் பயிற்சி பெறுவார்க்கு (மாணவர்க்கு) ஊண், உடை, எழுத்தாணி, புத்தகம், மேலும் வேண்டுவவும் எண், எழுத்து என்பவற்றையும் உதவி வாழ்பவர் புகழை உலகம் தேடி வந்து எழுதும். அப்புகழுக்கு உரியவராக அவர் வாழ்வார் என்பது இப்பாடற் பொருள். இனிப் பூத உடம்பு அழிதலையும் புகழுடம்பு அழியாமையையும் நீதி நெறி விளக்கம் விளம்புகிறது.