உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

129

தம்மையே ஆய்வுச் சாலையாகக் கொண்டு ஆய்ந்து கண்ட மருத்துவம் அஃதாம்.

சித்தர்கள் பதினெண்மர் என்பது ஒரு கணக்கு. சித்தர் பாடற்றிரட்டு மருத்துவ நூல்கள் என்பவற்றை நோக்கினால் வ்வெண்ணிக்கை மிகுகின்றது. ஊரும் பேரும் உரையா நெறியராகச் சித்தர்கள் வாழ்ந்தமையால் அவர்களைப் பற்றிய புனைவுகள் பின்னவர்களால் பெருக வழங்கலாயின. எனினும், அவர்கள் ஒடுக்கங்கள் ஆங்காங்கு இருத்தலைக் கொண்டும் அவர்கள் பாடல்களைக் கொண்டும் சில செய்திகளை அறிந்து கொள்ள வாய்க்கின்றது. சித்தர் பெயர்களும் அவர் தொடர்புடைய இடங்களுமாக வழங்குபவை:

சித்தர்

அகத்தியர்

அகப்பேய்ச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர்

இராம தேவர்

கருவூர்த் தேவர்

கமலமுனி

குதம்பைச் சித்தர்

கொங்கணமுனி

இடம்

பொதியமலை

திருமுதுகுன்றம்(விருத்தாசலம்)

திருவண்ணாலை

அழகர்மலை

கருவூர்

திருவாரூர்

திருக்கழுக்குன்றம்

திருப்பதி

சட்டைமுனி

திருவரங்கம்

சுந்தரானந்தர்

தன்வந்திரி

திருமூலர்

நந்திதேவர்

பட்டினத்தார்

பதஞ்சலி முனிவர்

பாம்பாட்டிச் சித்தர்

போகர்

மச்ச முனி வான்மீகி

மதுரை

வைத்தீசுவரன் கோயில்

சிதம்பரம்

சீர்காழி

திருவொற்றியூர்

இராமேசுவரம்

திருக்கடவூர்

பழனிமலை

திருப்பரங்குன்றம்

எட்டி குடி