உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 34ஓ

தக்கோராக இருந்த தகவே அவராகச் சார்ந்தாரை எல்லாம், சார்வாரை எல்லாம் சார்ந்து நிலைபெற்றது.

ஒரு வித்து, உயர்வித்து! மண்ணில் விழுகின்றது! இயற்கை அவ்வித்தை முளைக்கச் செய்கிறது. முளை-செடியாய்-மரமாய் ஆகின்றது! ஒரு வித்து பருவந்தோறும் காய்த்துக் கனியும் கனிகளைப் பல்லாயிரமாகத் தருகின்றது; தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு நெல்மணி, வித்தாக இருந்து முளைக்கின்றது. பத்து இருபது நாற்பது எனப் பண்ணையாகின்றது. கதிருக்கு நூறு ஆயிரம் என நெல் மணிகளைத் தாங்கி நின்று உலகுக்கு உயிர்ப் பொருளாகத் திகழ்கின்றது.

வாட்ட வாட்ட வறுமை வந்தாலும் வாடா 'ஒளி'யும், செத்தாலும் ஆயிரம் ஆயிரம் பிறப்பாய்த் திகழும் புகழும், எல்லார்க்கும் வாய்க்குமா? வாயாது! ஆதலால்,

"நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது”

என்றார் திருவள்ளுவ வித்தகர்.

வித்தகர் ஆவார், வித்தின் தன்மை அமைந்தவர்.

புத்தரும் வர்த்தமானரும் கிறித்துவும் நபியும் வள்ளுவரும் வள்ளலாரும் பிறரும் வித்தகப் பேறு பெற்றவர்!

சித்தர்

வித்தகர் மனமாசில்லா அறவர்; அருளாளர்; தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராம் அந்தண்மையர். அவர் தமிழ் மண்ணில் சித்தர் என வழங்கப்பட்டார்.

சித்தர் என்பார் சித்தத்தே மாசில்லாதவர், இத்தன்மை யுடையார் மானிட உருவில் இருந்தாலும் தெய்வ நிலையர்! இது,

"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்' என்னும் மணிவாசகத்தாலும்,

"சித்தன் போக்கு சிவன் போக்கு" என்னும் மக்கள் மொழியாலும் விளங்கும்.

உலகவர் நலம் கருதிய சித்தர் கொடைகள் அளப்பரியன, அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று 'சித்தமருத்துவம்’. சித்தர்கள்,