உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

127

எண்ணினால், பூத உடலோடேயே புகழுடற் பேறும் தொடங்கி விடுதல் புரியும்.

வாழும் போதே அடையும் பெருமை 'ஒளி' எனப்படும். வாழ்வின் பின்னர் அடைவது 'புகழ்!' ஒளி ஒரு கால எல்லை அளவில் நிற்பது. புகழோ, கால-இட - எல்லை கடந்தது என விளக்கமாகின்றது. பிறவிநோக்கு, உயிர்க்கு ஊதியமாம். புகழ்ப் பேறு எய்தி, என்றும் அழியா நிலைபேறு உறுவது என்பது தெளிவாம்.

ஒருவர் 'புகழ்' பெறவும், மற்றொருவர் 'இகழ்' உறவும் வாழ்கின்றனரே எனின், முன்னவர் பிறவி நோக்கும், அப்பிறவிப் பயனும் உணர்ந்தவர். பின்னவர் பிறவி நோக்கும் அப்பிறவிப் பயனும் உணராதவர், அவரவர் புகழுக்கும், இகழுக்கும் அவரவரே பொறுப்பாளர் அல்லாமல், பிறர் பொறுப்பாளர் அல்லர் என்பதை வள்ளுவர் தெளிவிக்கிறார். அது,

“புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?' என்பது (237) “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்" என்பது (500) காண்க.

வித்தகர்:

தக்கார்,வாழும் வாழ்வாலே தாம் தக்கார் என்பது புலப்பட வாழ்கிறார். வறுமை வந்தால் பலர் நெறிதவறுகிறார்; கொள்கை வழுவுகிறார்; குறைகளில் விளையாடுகிறார். ஆனால் தக்கார், வறுமையுற்றால் அவ்வாறு நிலையில் கீழே இறங்கு கிறாரா? சங்கு இருக்கிறது; வெண்ணிறமானது; முத்துக்கு உறைவிடமானது. அச்சங்கு, சுடப்படுகிறது நூறாக - தூளாக- சுடப்படுகிறது. சுட்டது கரியாகுமே! சங்கு கரியாயதா? கருகியதா? வெளுத்தது-சுடச்சுட மேலும் மேலும் வெளுத்தது. அதுபோல் தக்கோர்க்கு எத்தகு வறுமை வாட்டினாலும் தம் நிலைத்தளர்வு வாராது. அவர் மேலும் தக்கோராகவே திகழ்வர்! அம்மட்டோ! அத்தக்கோர், இயற்கை எய்துகிறார்! அவ்வியற்கை தகவிலார் இயற்கை எய்தியது போல வாளா ஒழிகின்றதா? இல்லை! அசைக்கின்றது! அசைக்கின்றது! தக்கோரை எல்லாம் அசைக் கின்றது. அத்தக்கோர் வழியைப் பற்றி நடக்க பாரெல்லாம் பரப்பத் தூண்டுகின்றது. ஒருவர் மறைவு உயர்ந்தோரை எல்லாம்- உலகை எல்லாம் அசைக்கும் திறம் எப்படி பெற்றது? அவர்

-