உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

அச்சம் எங்கே இருந்தது?

அஞ்சாமை எங்கே இருந்தது?-

இரண்டும் உள்ளத்தே தான் இருந்தன.

உள்ள உறுதியே உறுதி

“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; வெறுக்கை=செல்வம்

“உள்ளம் உடைமை உடைமை

"

“உடையர் எனப்படுவது ஊக்கம்” இவை வள்ளுவம். பூதஉடல் புகழ்உடல்

மண் நீர் தீ காற்று விண் என்னும் ஐம்பூதச் சேர்க்கையால் அமைந்தது உலகம். உயிரிகளின் உடலும் அவ்வைம்பூதக் கலப்பால் அமைந்தது பொறிபுலன்களைத் தாங்கி வாழ்கின்றது. பூதங்களால் அமைந்த உடல் பூதஉடல். அப்பூத உடலொடு உயிர் கூடி நின்று செய்த செயல்களின் வழியாக அடைந்த புகழ்ப் பேற்று உடல்-உருவ உடல். உருவ உடல் வழியாகப் பெற்ற அருவ உடல்-புகழ்உடலாகும். அவ்வுடல் பூதஉடல் போல் அழிவுடையது அன்று. நிலைபேறானது. அதனால்,

66

“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பது ஒன்றில்”(233) என்றது திருக்குறள்.

'ஓரியற்பட அமையாத உலகத்தில் உயர்ந்த புகழ் ஒன்றுமே அல்லாமல், அழியாது இருப்பது எதுவும் இல்லை" என்பது இதன் பொருளாம். ஆதலால், அழிவதாம் பூத உடலைக் கொண்டு, என்றும் அழியாப் புகழ் உடலைப் பெறுதல் வேண்டும் என்க.

புகழ்ப்பேறு,உயிர்க்கு ஊதியப் பேறாகும். அது, ஈகையால் கிட்டுவதாகும். தாம் கொண்ட உடலால் தேடிய பொருள்களால் மட்டுமன்றித், தம் உடலையும் பிறர்க்கெனவே வழங்கும் ஈகத்தால் விளைவது அது என்பதை,

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு"

என்று விளக்குகிறது திருக்குறள் (231).

"ஈதல் உண்டானால் இசை(புகழ்) பட வாழ்தலும் உண்டு என இருமையும் ஒருமையாய் நிகழ்வதைத் தெளிவித்த சிறப்பை