உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

பானையை வீசிஎறிந்து பாறையை உடைக்க முடியுமா? கோழி முட்டையால் குன்றம் சிதையுமா?

அச்சம்

66

125

'காலா என் காலருகே வாடா என்னும் வீறுடையான்முன்

காலன் அச்சம் உண்டா?

"நஞ்சு தானே! இன்னும் எவ்வளவு குடிக்க வேண்டும்;" கொண்டு வா" என்பானை இறப்பு நெருங்குமா?

அஞ்சினால் தானே நஞ்சு!

நஞ்சே ‘அமுது' ஆனால், பொருள் என்ன?

அஞ்சாப் பெருமிதம் அது!

"ஐயோ கொல்கிறானே" "ஐயோ கொல்கிறானே" - இது கோழையின் குரல்!

"தின்னவரும் புலிதன்னையும்" அன்பொடு நோக்கல்,” இது ஆளுமை வெற்றி!

"சாகத் துணிந்தவனுக்குக் கடலும் காலளவு"

"அஞ்சியவனைக் குஞ்சும் வெருட்டும்! - பழமொழிகள்

செத்துப் போனவன் மட்டுமே அச்சப் பொருளில்லை! செத்துப் போனவன் செத்த இடமும் அச்சம்! அவனைப் புதைத்த இடமும் அச்சம்! பேயச்சம்! பேரச்சம்! அச்சமே பிறப்பானது அது!

அரசன் அதிவீர ராமன்,

"அச்சம் உள்ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்று” என்றான்.

66

'அஞ்சி அஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை”

என்றார் பாரதி.

66

அச்சமே கீழ்களது ஆசாரம்"

என்றார் வள்ளுவர்