உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

124

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

"கோடியைக் கொண்டு போனாலும் போ, என் உயிரைக் கொள்ளாமல் போனால் போதும்” என்னும் நிகழ்வுகள் இல்லையா? வழிவழியாய்த் தேடிய உடைமைகளை எல்லாம் இழந்து கட்டிய உடையோடு, எல்லாம் இழந்தும் உயிரை இழக்க விரும்பாராய் வருவார் இலரா?

இன்னவரைக் காணுங்கால் உயிரின் மதிப்பும், இறப்பின் கசப்பும் ஒருங்கே புலப்படும் அல்லவோ!

நோற்றலின் ஆற்றல்

மெய்யுணர்வு, நாவுணர்வு,மூக்குணர்வு, கண்ணுணர்வு, செவியுணர்வு, மன உணர்வு எனப் படிப்படியே விளங்கி, விரிந்து, நரை திரை மூப்பு ஏற்பட்டு, உடல் தளர்ந்து சுவையும் பார்வையும் கேள்வியும் படிப்படியே தேய்மான முற்று உணர்வு தடுமாறி நினைவு இழந்து போகும் இயற்கையை உணர்ந்து அமைந்து ஒடுங்கியவர் இடம், ஊரவர் கூடி வழிபடும் ஒடுக்கங்களாக, திருமடம் திருக்கோயில்களாகத் திகழ்வதும் கண்முன் காண்பவே யாம். அவர் சாவுக்கு அஞ்சாமை ஏன்? சாவை எதிர்கொண்டமை எதனால்?

அவர் இயற்கை அறிவர்; இயற்கை வாழ்வர்; இயற்கை இறைமையில் தோய்ந்தவர்; அவர்க்குச் சாவு அச்சப் பொருள் ஆவது இல்லை!

சாவுக்கு அஞ்சாதவரைக் கண்டு, சாவு அஞ்சுகிறது; அவர் முன் நிற்க ஆற்றாது ஓடுகிறது. அந்நிலையே,

“கூற்றம், தோற்றுக் குதித்து ஓடும் நிலை” இதனை வள்ளுவம்,

"கூற்றம் குதித்தலும் கைகூடும்; நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு” என்று கூறும்.

“அல்லல் அருளாள்வார்க்கு இல்லை” என்றும் அறுதியிட்டுக் கூறும்.

‘துன்பத்திற்குத் துன்பம் செய்யவும்’

இடும்பைக்கு இடும்பை ஆக்கவும் வல்லார் அவர்!

"இன்பத்திற்கு இன்பம் விரும்பார்,

துன்பத்திற்குத் துன்பம் உறார்"

அவர் உள்ளம் அவா அறுத்த உள்ளம்! நிலைபெற்று மலை போலும் உள்ளம்! அது 'பேரா இயற்கைப் பெருமை'யது?