உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

123

துறவன் - முனிவன் - உற்றநோய் நோன்றலாளன் - அவன் நாயூன் தின்றான் எனின், பசிக் கொடுமை மட்டும் தானா காரணம்? இல்லை!

உயிர் மேல் இருந்த பற்று! சாவின் மேல் இருந்த அச்சம்!

சாவு

கொடுமையில் எல்லாம் கொடுமையான துயராகத்

தோன்றுவது சாவு! இது பொய்யாமொழி!

"சாதலின் இன்னாதது இல்லை" என்கிறது அது (230).

சிலர் சாவைத் தாமே ஏற்கின்றனரே, வலிய ஏற்கின்றனரே எனின், வாழ்வுக் கொடுமை சாவை விரும்பி ஏற்க வைக்கின்றது என்பதே பொருளாம். விளக்கின் விரிவுறும்.

“பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார் இறந்தார் என்கை இயல்பே"

என ஆயிரம் சொன்னாலும் (மணிமே. 24:103-104),

"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

எமக்கு என்ன என்று இட்டு உண்டு இரும்"

என எடுத்துக் காட்டினாலும், “செத்தாரைச் சாவார் சுமப்பார் என்பதை நேரில் கண்டாலும், சாதல் துயர்க்கு இணை சாதல் துயரேயாம்.

உயிரின் மதிப்பு

உயிரின் மதிப்புக்கு இணை உயிரின் மதிப்பே.

எத்தனை நோயுற்றாலும், எத்தனை வறுமைக்கு ஆட்பட்டாலும், எத்தனை இழிமைக்கு ஆளானாலும் உயிர் இருக்கும் வரை அவனை/அவளை 'சவம்' 'பிணம்' என்னார், புதையார்!

எரியார்!

எவ்வளவு வளமான உடலர், செல்வர், பதவியர், பெருமையர் எனினும் உயிர் போனபின்,

"பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு" எரிப்பர்!

புதைப்பர்! அடக்குவர்!