உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

பசியின் கொடுமை என்ன?

'ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறியாய் இடும்பைகூர் என்வயிறே

"

உன்னோடு வாழ்தல் அரிது” - இதுவும் நல்வழியே (13).

‘பசி' துயரா! நோய்; பிணி! 'பசியென்னும் தீப்பிணி:' பசிக்கு உணவு வழங்குவோர் மருத்துவர்!

அவர் பசிப்பிணி மருத்துவர்!

அவர் பசிப்பிணி என்னும் பாவியது தீர்க்கும் மருத்துவர்!

இவை புறநானூறும், மணிமேகலையும் கூறுவன. பசிப்பிணி தீர்த்தோர் புகழே புகழ்:

மணிமேகலை இசைக்கின்றது: "குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புனை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக் கெந்நா நிமிராது (11:76-81)

"உலகத்து நூலார் உரைத்தவற்றை யெல்லாம் ஒருங்கே திரட்டிப் பார்த்து ஓர் அறம் கூறுக என்றால், அவ்வொன்று பசிப்பிE தீர்த்தலாம் அறமே " என்கிறார் திருவள்ளுவர். அது,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்பது (322).

66

'ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பதும்

அற்றார் அழிபசி தீர்த்தல்” (226) - என்பதும் திருக்குறளே.

பசித்துயர், பசிநோய், பசிப்பிணி தாங்கா முடினவன்

ஒருவனைத்

“திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்” என்கின்றது

மணிமேகலை (11:87). ஏன்?

"அரும்பசி களைய ஆற்றுவது காணான்" என விடையும் தருகின்றது.