உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

121

பிறந்தவர் அனைவரும் இறந்தே ஆவர் என்பதால்தான் சங்கச் சான்றோர், "நினைக்கென வரைந்த எல்லை" (நினக்கென அமைந்த காலம்) நலமுற வாழ்க என வாழ்த்தினர்.

வேட்கை

-

இறவா நிலை

வேண்டும் என

சாவா வாழ்வு வேட்கையுடையராகப் பலர் இருந்தனர்.

'இவர் இவர் என்றும் றவா நிலையர்' என எண்ணவும்

பட்டனர்!

'உடலோடு உயர்வான் புக, வேள்வியால் கூடும்' எனவும் கூறிக் கொண்டனர்!

"சொல்லளவால் முழக்கப்பட்டவை அல்லாமல் இவை காட்சியள வால் மெய்ப்பிக்கப்பட்டனவா?" என வினவின் விடை என்ன?

உடலும் உயிரும்

'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' -என்பது தமிழ் மந்திரம் தானே!

உண்டி உல்லாமல் உயிர்வாழ்வு இல்லை என்பதால் தானே, "உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" எனப் பட்டனர் (மணிமே.11.96)

உயிரின் மதிப்புக்கு முற்பட்டது, உண்டியின் மதிப்பு அல்லவா! உண்டியின் மதிப்புச் சான்றுதானே, 'அமுத சுரபி'! ஆபுத்திரன் பெருமை, மணிமேகலை பெருமை, அமுத சுரபிப் பெருமை என்றால், அமுதரசுரபிப் பெருமையே சோற்றுப் பெருமைதானே!

"சோற்றுக் குள்ளே உள்ளான் சொக்கப்பன் (இறைவன்) என்னும் பழமொழி கேளாததா?

பசி

"பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்" என்னும் பழமொழி கூறும் பத்தும் எவை?

“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப்பறந்து போம்” - என்பது நல்வழி (27).