உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம் 34

அறவரணம் ஆராய்ந்து அடையின் அஃதல்லால் பிறவரணம் இல்லை உயிர்க்கு”

என்பது அப்பாடல்.

அறத்தைப் பேணிக் காத்தால் உயிர்க்கு அவ்வறமே அரணாக நின்று புகழால் நிலைபெறுத்தும் என்பது கருத்தாம். இனிப் பூத உடம்பு நிலைபெறக் காண்கிறோமா எனின் இல்லை என்பதே மறுமொழியாம். "உலகச் சிந்தனை எல்லாம் ஒருங்கு திரண்டிருந்த பெருமையர் புத்தர்" என்பர், விவேகானந்தர். அப்புத்தர், நிர்வாணம் பற்றிய வரலாறு உலகறிந்தது. அவர் நகம், பல் முதலியவற்றை வழிபாட்டுப் பொருளாகக் கொண்ட பௌத்த சமய உலகம் புகழுடம்பைப் போற்றுவதை அன்றிப், பூத உடம்பைக் கண்டதும் கொண்டதும் இல்லையே!

லெனினார் உடல் போற்றி வைக்கப்பட்டுள்ளது. தோமசு முனிவர் உடலும் காக்கப்படுதல் உண்டு. ஆனால், அவை இயக்கம் உடையவையா?

மருத்துவ ஆய்வுக்குத் தம் உடலைச் சேமிப்பாக்கிடத் தந்தை கூறியவாறு, மக்கள் மருத்துவ மனையில் வழங்கினர். எம் நெருங்கிய நண்பராக இருந்தவர் அவர். முதற்கண் வழங்கிய நிலையில் உடல் காணப்படவில்லை முதலாண்டில், மூன்றாம் ஆண்டில், சிறிதும் அடையாளம் காணமுடியவில்லை! மரண மிலாப் பெருவாழ்வோ அழியா நிலையோ உடலுக்கு இல்லை என்பது விளக்கியாக வேண்டியது இல்லை. மணிமேகலையில் வரும் ஒரு காதை சக்கரவாளக் கோட்டம் உரைத்தது என்பது (6) அதில்,

"சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும் துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்

பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்

இன்னா இசையொலி என்றுநின் றறாது”

என்கிறது (66-74; 79). சக்கரவாளக் கோட்டம் என்பது சுடுகாட்டுக் கோட்டமாம்.கோட்டம் = கோயில்.