உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

133

மாந்தர் வாழ்நாளையும் வீழ்நாளையும் இறப்பு அவலங் களையும் கபிலர் அகவல் விரிக்கின்றது:

"மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை ஐம்ப திரவில் அகலும் துயிலினால் ஒட்டிய இளமையால் ஒரைந்து நீங்கும் ஆக்கை இளமையால் ஐம்மூன்று நீங்கும் எழுபது போகநீக் கிருப்பன முப்பதே... நாளை நாளை என்பீர் ஆகில் நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர் நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர் எப்போ தாயினும் கூற்றுவன் வருவான் அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப் போற்றவும் போகான்; பொருளொடும் போகான்; சாற்றவும் போகான்; தமரொடும் போகான். நல்லார் என்னான்; நல்குர வறியான்; பொல்லார் என்னான்; செல்வரென் றுன்னான்;

தரியான் ஒருகணம்; தறுக ணாளன்;

உயிர் கொடு போவான்; உடல்கொடு போகான்;

என்பது அது.

கபிலர் அகவல் மேலும் குரல் கொடுக்கிறது;

“ஏதுக் கழுவீர் ஏழை மாந்தர்கள்

உயிரினை இழந்ததோ? உடலினை இழந்ததோ?

உயிரிழந் தழுதுமென் றோதுவீர் ஆகின்

உயிரினை அன்றும் காணீர்; இன்றும் காணீர்;

உடலினை அன்றும் கண்டீர்; இன்றும் கண்டீர்”

என்கிறது. இச்செய்திக்கு முன்னோடியானது மணிமேகலை :

“உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ

உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை

எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே!

உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில்

செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது

அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி