உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்"

என்பது. இதில், "உயிர் தன் வினைப்பயனால் ஏதோ ஓர் உடலகத்துள்ளது. அதனைக் காணற்கியலாது. காணற்கில்லா அதனைக் கண்டு உதவ வேண்டும் என்றால், எல்லா உயிர் களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும்" என்று கூறப்படுகிறது. உடல் அழிவது போல் உயிர் அழியாது: ஆனால் அதனைக் காணவோ காட்டவோ முடியவும் செய்யாது என்பது உணர்த்தப்படுகிறது.

றை உயிர்தளை :

இறை, உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் அழியாதவை என்பது சிவனியக் கொள்கை.

இதன்படி பார்த்தால், எவ்வுயிர்க்கும் பொதுவாம் இயற்கை தானே இது. அரிதின் முயன்று பெறக் கூடியது என்பதற்கு இடமில்லையே. அதனை வேண்டிப் பெற வேண்டுவதென்ன? வேண்டினும் வேண்டாவிடினும் உயிர்க்குச் சாகா நிலையும், மரணமிலாப் பெருவாழ்வு நிலையும் வாய்த்திருப்பவை தாமே எனத் தெளிதல் வேண்டும். இப்பொது நிலை தவிர்த்த சிறப்பு நிலையே சாகாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு எனக் கொள்ள வேண்டும்.

இறை, உயிர், தளை எனப்படும் மூன்றும் என்றும் நிலை பேறானவை: அழியாதவை என்னும் ஒரு முடிபு பொதுமையில் காணப்படினும் அதற்கும் ஒரு முட்டுக் கட்டை உள்ளது.

யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்னும் நிலையாமை மூன்றனைக் கூறிய திருமூலர் அவற்றை அடுத்தே 'உயிர் நிலையாமை'யையும் கூறுகிறார். அப்பகுதியில் பாடல்கள் பத்து உள்ளன: அவை, "எல்லாம் இறக்கின்ற கண்டும், எம்பெருமான் அடி ஏத்தார், அழைக்கின்ற போது அறியார் அவர்தாமே"

66

“ஐவருக்கு ஒருசெய் விளைந்து கிடந்தது

ஐவரம் அச்செய்யைக் காத்து வருவார்கள்

ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்

ஐவருமச் செய்யைக் காவல் விட் டாரே' - 188

“வேங்கடம் என்றே விரகறி யாதவர்

தாங்கவல் லாருயிர் தாமறியாரே” - 190