உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

வள்ளலார் கண்ட சாகாக்கலை

139

வள்ளலார் கடிந்துரைத்த தடைகளின் முழுத்தொகுப்பு அன்று இது. இவை போதும் என்று அமைவோம்.

தடைநீக்கம் :

இத்தடைகள் அகன்ற - அகற்றப்பட்ட நிலையில் தோன்றுவது, சன்மார்க்கம்' என்னும் பொது நிலை அதுவே, ஆன்ம நேயப் பெருநெறி. அப்பெருநெறியை அடிகள் பெற்றுக் கொண்டார்! பற்றியும் கொண்டார். அதற்குச் சில சான்றுகள் : பல அல்ல! முன்னே காட்டியவற்றிலும் சில உள.

“அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்" (4079)

“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமை உளர் ஆகிஉல கியல் நடத்தல் வேண்டும்" (4082) “எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்" (4083)

"எவ்வுலகமும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்" (4086) இவை, சுத்த சன்மார்க்க வேண்டுகோளில் மின்னுவன.

“சன்மார்க்க சங்கத் தலைவனே, நிற்போற்றும் என்மார்க்கம் நின்மார்க்க மே"

என்பது சன்மார்க்க உலகின் ஒருமை நிலையில் ஒளிர்வது (5621)

“ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங் கென்மார்க்க மும்ஒன்றா மே"

இது சுத்தசிவ நிலையில் உள்ள ஓரொளி (5527)

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர் எல்லாம் செய் வல்லநம திறைவனையே தொழுவீர் புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாயத் தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே