உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“நீதான், என்னை விடமாட்டாய் நான் உன்னை விடமாட்டேன்

55

இருவரும் ஒன்றாகி இங்கே இருக்கின்றோம்' (5448)

“என்னுடலும் என் பொருளும் என்னுயிரும் தான் கொண்டான் தன்னுடலும் தன்பொருளும் தன்னுயிரும் என்னிடத்தே

“எந்தேகம் அதிற்புகுந்தார் எம்உளத்தே இருந்தார் எம் உயிரில் கலந்த நடத்திறையவர்”

“கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்

கணவர்திரு மேனியிலே கலந்தமண மதுதான்...

நான் அது ஆனேனே"

“பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது

தந்தான்’

(5522)

(5704)

(5763)

பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்" (5818)

141

சன்மார்க்கம் கண்டுகொண்ட அருளாளர். இறைவனும் தாமுமாய் இணைந்து விடுகின்றனர் என்பதை, வள்ளலார் மொழி வழியே தெளிந்து கொள்ளுதல் மேலாய்வுக்குத் தேவையாம்.

ஒன்றுநிலை:

தீப்பற்றிக் கொண்ட வீட்டுள் இருந்து வெளியேறும்

துடிப்பு.

வெள்ளச் சுழலுள் அகப்பட்டவன் வெளியேறத்துடிக்கும் துடிப்பு என்பவை போல, இறையருளைப் பெறவும், அவனோடு இணையவும் அடியார் துடிப்புக் கொள்வர் என்பதை வள்ளலார் வழியே வெளிப்பட அறியலாம் அவர்கள் ஆழிய எண்ணத்தில், இறையோடு ஒன்றும் இறைநிலையே இறவாப் பெருநிலை", “சாவாக்கலை”, "மரணமிலாப் பெருவாழ்வு" என்னும் திண்ணிய வண்ணம் உண்டாகின்றது என்பது தெளிவாகின்றது. பிறப்பு இறப்பு இலா இறையோடு ஒன்றியவர்க்கு, இந்நிலைகள் ஏற்படா என்னும் தெளிவுண்டாகிய பேற்றில் அவர்கள் திளைக்கின்றனர் என்பதும், அத்திளைப்பிலே அவர்கள்

வாக்குகள் வெளிப்படுகின்றன என்றும் கொள்ளல்

முறையாம்.