உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

"என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்”

145

(5601)

மேலும், இறையோடு ஒன்றிய நிலையில்,

"எல்லாம் வல்ல சித்தளித்து’

என்றும்,

55

“எனக்கும் நின்னைப்போல நுதற்கண் ஈந்து”

என்றும்

(4615:297)

(5001)

"சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்" (4797)

என்றும் கூறுவனவற்றை எண்ணுக.

பெருமிதம்:

ஒரு வாழ்விலே பெருமிதம். நான்கு வகையால் எழும் என்று தொல்காப்பியர் சுட்டுவார். அவை, கல்வி, தறுகண்,

கொடை என்பன என்பதை,

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”

சைமை,

என்பார். சிறந்தமைந்த இல்லற வாழ்வு வாய்க்கப் பெற்றாரும் பெருமிதம் கொள்வர் என்பதைத் திருவள்ளுவர்.

"வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே

வாழுநம் என்னும் செருக்கு" என்பார்

(1193)

இறவாப் பேறு தாம் பெற்ற பெருமிதம், வள்ளலார்க்கு ஏற்பட்டமையை அறை கூவுகிறார்! தாமே பெற்ற வீறுமிக்க பேறெனவும் கொள்கிறார்.

"நோவாது நோன் பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்

பேரருளை என்போலப் பெற்றவரும், எவ்வுலகில்

யாருளர் நீ சற்றே அறை"

என்பது இது. தேவா, எனைப் போல் நோற்றவரும், சார்ந்தவரும், பெற்றவரும் யாருளர்; நீ சற்றே அறை என்பது

ஒன்றில்லாப் பெருமிதம் இல்லையா? (5624)

ணை

து காறும் வள்ளலார் அருளிய பாடல்களின் வழியாக நாம் கண்டவை இவையாம். உரைநடை வழியாக அறியக் கிடப்பவை எவை என்பதையும் எண்ணல் வேண்டும்.