உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம்

-

34

திருவருள் விளக்கத்தால் மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடை படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட உணர்த்தியருளப் பெற்றோம், என்பது சுத்த சன்மார்க்க சத்தியச் சிறுவிண்ணப்பத்துளது.

"தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம், பிணி,மூப்பு,பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்" என்பது சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்துளது.

"சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்."

தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைத் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

6

தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கம் செய்வானானால் அவன் ஆயிரம் வருடம் சீவித் திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகம் செய்து காண்டிருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம் (இரண்டரை நாழிகை என்பது ஒரு மணிநேரம்) எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம் இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன் தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.

வை உபதேசக் குறிப்பில் உள்ளவை.

"நான் இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்" என்று, சுவாமிகள் ஸ்ரீ முக ஆண்டு கார்த்திகை மீ த்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்துத் திருவாய் மலர்ந்தருளினார் கள் என்றோரு செய்தி உள்ளது. அதன் பின்னுள்ள ஒரோ ஒரு செய்தி?