உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை” என்பதே

30.01.1874

ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19ம் தேதி

147

"நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத் தான் இருக்கும் படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்" என்பது அது.

காணப்பட்டவை:

இதுவரை கண்ட செய்திகள் எவை? சுருக்கத் திரட்டு

வருமாறு:

"ஓரறிவு முதல் ஆறறிவு உயிரிவரை உள்ளவை எல்லாம் தோன்றி வளர்ந்து மறையும் இயல்பினவாகவே உள்ளன. மாந்தர் வாழ்வு ஆறறிவுடையது எனினும், ஓரறிவுயிரி போலவே தோன்றி ஒடுங்குவதே கண்கூடு,என்றும் வாழ்பவர் (சிரஞ்சீவி) என்று சொல்லப்படுபவர் எவர்தாமும் காணும் வடிவில் காணப்படு வார் அல்லர். மாந்தர் உடம்பு பூத உடம்பு. புகழ்உடம்பு எனப் பேசப்படும் நிலையது. பூத உடம்பு நிலையற்றது. ஆனால் புகழுடம்பு நிலை பெற்றது. அது புகழ் நிலையதே அல்லாமல் கண் கூடாகத் தோன்றும் தோற்ற முடையது அன்று. பிறருக்கு என வாழும் வாழ்வால் அப்புகழ் வாழ்வைப் பெறலாம். பூத உடல் வாழ்வு, சாதிமத சடங்கு விகற்பமற்ற பொது நிலையாம் சன்மார்க்க நிலை உற்றால் இறை நிலை எய்தும். இறை நிலை வேறு, சன்மார்க்க நிலை வேறு என்று இல்லா ஒருமை நிலையில் ஒன்றிவிட்டால், இறை நிலை எவ்வாறு சாவாநிலை ஆகுமோ அவ்வாறே சாவா நிலையாகிவிடும். இறைநிலை எப்படி உருவ நிலையில் காணுதற்கு இயலாததோ அதே நிலை தான் அதனைச் சார்ந்த சன்மார்க்கி நிலையுமாம் என்பதேயாம்" என்பது. மேலும், அமரநிலை, நடுகல் நிலை, ஒடுக்க நிலை, பெருந்தகை நிலை, என்பனவும் அறியப்பட்டனவாம்.

திருக்குறளில் சாகாக் கலை:

"தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது என்று வள்ளலார் கூறியதை நாம் கருத வேண்டும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில்,