உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்"

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்'

"

என்னும் இரண்டு பாடல்களையே

வள்ளலார் சுட்டிக்

காட்டினார் என நாம் கொள்ளலாம். ஏனேனில், நீடு வாழ்தல் என்னும் ஆட்சி அப்பாடல்களில் இருத்தலால் என்க.

இப்பாடல்களுக்குப் பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரையைக் காணல் ஓரளவு பயனாம். அவர்கள் நம்பாமதத்தினர் (நாத்திகர்) அல்லர். நம்பு மதத்தினர்! வள்ளலார். அவர்களைப் போல நம்பு மதத்தராக இருந்து படிமேல் படியேறி, சன்மார்க்கம் (பொது நிலை) கண்டவர். நம்பா மதத்தாரை, நம்புமதத்தாரைக் கடிவது போலவே கடிந்தனர். ஆதலால், பழைய உரைகளை நோக்குதலே முறையாம்.

“மலர்மிசை ஏகினான்” என்பதற்கு

"மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார், எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின் கண் அழிவின்றி வாழ்வார்" என்பது பரிமேலழகர் உரை. மணக்குடவர், "மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப் பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே நிலத்தின் மேல் நெடுங்காலம் வாழ்வார்" என்று பொருள் கூறுகிறார். மேலும்,

'நிலம் என்று பொதுப்பட கூறியதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும். தொழுதாற் பயன், என்னை என்றாற்குப் போகம் நுகர்தலும் வீடுபெறலும் என்று கூறுவார் முற்படப் போக நுகர்வார் என்று கூறினர்" என்று விளக்கமும் வரைகிறார்.

"பூமியின் கண் சகல பாக்கியமும் அநுபவிப்பர் எனப் பரிதியார் பகர்கிறார். காளிங்கர், "மலர்மிசை ஏகினான் என்பது எல்லாருடைய நெஞ்சத் தாமரையினும் சென்று பரந்துள்ளான். மாணடி என்பது மாட்சியுள்ள அடி நிலமிசை நீடுவாழ்வார் என்பது நித்தராயுள்ளார் இந்நிலத்தின்கண் இவ்வாறு வணங்கி வழிபட்டு எவ்வுயிர்க்கும் உயிராய் நின்ற இறைவனது குற்றந் தீர்ந்த அடியினைச் சேர்ந்தவர் யாவர் மற்ற அவரே முத்தராவர்” என்கிறார்.