உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

149

பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் பாடலுக்குப் பரிமேலழகர், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் பொறி களை வழியாக வுடைய ஐந்தவாவினையும் அறுத்தானது மெய் யான ஒழுக்க நெறியின் கண் வழுவாது நின்றார். பிறப்பின்றி எக்காலுத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார் என்று உரை கூறுகிறார்.

மணக்குடவர், "மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்தின் கண்ணும் செல்லும் மனநிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற ஒழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்" என உரைகூறி, "இது சாவில்லை" என்றது, என்றும் கூறுகிறார்.

"இகபரம் (என்னும்) இரண்டிலும் நெறிநின்று அநேக காலம் வாழ்வர்" என்று பரிதியாரும்,

"முத்தராவர்" என்று காளிங்கரும்,

'ஒரு காலமும் அழிவில்லாமல் இருக்கின்ற மோட்சத் திலே எக்காலமும் வாழ்வார்கள்" என்று தாமத்தரும், "இகத்திலும் பரத்திலும் நெடுங்காலம் வாழ்வர்' என நச்சரும்,

"முத்தராய் நெடுங்காலம் வாழ்வர்" வாழ்வர்" என்று தருமரும் கூறுகின்றனர்.

இவற்றுள் "சாவில்லை" என்னும் மணக்குடவர் உரையே வள்ளலார் கருத்தொடும் பொருத்தி நடக்கின்றது என்பது வெளிப்படை.

மருந்து என்னும் அதிகாரத்தில்,

66

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு”

என்பது நோயின்றி நெடுங்காலம் வாழும்-உடலொடு வாழும்- வாழ்வு பற்றிக் கூறுவதேயாம்.

தும்மும் ஒருவரைக்கண்டு மற்றவர் "நீடு வாழ்க" என்பதும் உடலொடு நெடிது வாழும் வாழ்வு பற்றியதேயாம்.

சாவாநிலை (மரணமிலாப் பெருவாழ்வு) என்னும்

குறிப்பொடு இவற்றைக் கொள்ளற்கு இல்லை.