உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

உளதாகும் சாவு :

151

உலகத்தார் உள்ளத்துள் இருப்பவன் சாவா நிலையானா? மரணமிலாப் பெருவாழ்வு வாழ்பவனா என்னின் 'ஆம்' என்கிறது திருக்குறள். அது, 'உளதாகும் சாக்காடு' என்கிறது. என்றும் எங்கும் உள்ளதாக வாழும் 'சாவு' அது, அனைவர்க்கும் பொதுவான தன்று. வித்தகர்க்கு மட்டுமே உரியது. இக்குறள் முன்னே பொதுவகையால் சுட்டப்பட்டது. இப்பொழுது வள்ளலார்க்குச் சிறப்பு வகையால் சுட்ட மேற்கொள்ளப்பட்டது என்க.

அருகரும், புத்தரும், வள்ளுவரும், கிறித்துவும், நபிகளும் குருநானக்கும், வள்ளலாரும், இராம கிருட்டிணரும்-கண்காணும் வடிவில் தோன்றுகின்றார் அல்லர் எனினும் அவர்கள் பெயரால் கால்கொண்டு உயர்ந்தோங்கும் நிறுவனங்கள் - நிலையங்கள்- இயக்கங்கள் - பரப்பகங்கள் எத்தனை? எத்தனை? இவை யனைத்தும் இப்பெருமக்கள் புகழ் வடிவங்கள் அல்லவோ!

-

ஒருவராய் நின்ற வாழ்வு, கோடி கோடிப் பேராய்க் கொடி தூக்கி நிற்குமானால் அது முடிந்து போன வாழ்வு ஆகாதே! மேலும், மேலும் முளைத்தெழும் வாழ்வு அல்லவோ அது! ஆதலால் அவ்வாழ்வு சாவா வாழ்வோம்! பொதுமக்கள் வழக்கிலே இயல்பாகச் 'சாகா வரம் பெற்றவன்' என்பதுண்டு. அடியார்கள் 'சாகாவரம் அருள்வாய்' என்று தாம் வழிபடும் இறையிடம் முறையிடல் உண்டு. மக்கள் வழக்கில் சாகாவரம் பெற்றவன் என்பது 'சாவாரம் செத்தவன்' என இழிமைப் பொருளில் வழங்குகின்றது. உடல் நலிவுற்றது நெடுநாள் வாழ்ந்தாலும் சாவாமல் இருப்பவனைக் குறிப்பது நடைமுறைப் பொருள். சொல் சிதைவுற்றும் அதன் பழம்பொருளை இழந்து விடவில்லை என்பது அச்சொற் பொருளாலே புலப்படுகின்றது.

சாவா வரம் வேண்டுதல் நிலைவேறு. அதனைப் பெற்றதாகக் கொள்ளும் பெருமிதம் வேறு. இப்பெருமிதம் தம் உணர்வு மேம்பாட்டில் எழுவது நொடியும் நொடியும் சாவைக் கண்ணாரக் காணும் உலகம் எளிதாகச், சாவாமையை ஒப்புக்கொள்ளுமா? உலகியல் :

'செத்தாரை எழுப்பிக் காட்டுக : காட்டினால் நம்புவோம்' என்னும் நெருக்கடி வள்ளலார் முன்னேயே நிகழ்கின்றது. செத்தாரை எழுப்பும் திறம் நமக்கு இறையருளால் வாய்த்தது என்னும் அவர் திருமொழிகளும் தூண்டுதலாயின பூசலார் நாயனார் எழுப்பிய மனக்கோயில் வெளிப்பாடு உடையதா?