உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

வள்ளலார் கொண்டவை எல்லாம் அகநிலைக் காட்சிப் பேறுகள்; அவற்றைப் புறநிலைக் காட்சியாக்க வேண்டும் என்பார்க்கு இரங்குவதை அன்றி என்ன செய்யக் கூடும்?

'வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர் பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்' என்று அறிக்கை வெளியிட்ட (25.01.1872) நாற்பது நாள்களை அடுத்தே (09.03.1872), சலிப்பு உண்டாகின்றது.

சலிப்பு :

'இந்தச் சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது, அந்தச் சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும் ஆதலால், சாலையில் இருக்கிறவர்களெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேல் பழியில்லை சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்' என்று கட்டளையிடுகிறார்.

புதுவை இரத்தினர்க்கு எழுதிய அஞ்சலொன்றில் (19) சித்திரை வைகாசி இவ்விரண்டு மாதமும் போக ஆனி மீ இருபது தேதிக்கு மேல் என் தேகம் இருந்தால் அவசியம் சென்ன பட்டணம் வருவேன். இதுதவறாது என்பது நினைவில் வருகின்றது. வள்ளலார் சில நாள் பலநாள்களுக்கு ஒருமுறை சித்திவளாகத் திருமாளிகையில் இருந்து போய் வந்துள்ளார். பின்னர் சீமூக ஆண்டு தைமாதம் பத்தொன்பதாம் நாள் (30.01.1874) 'நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்' என்று சொல்லியிருக்கிறார். வள்ளலார் வழியாக அறிந்து கொள்ள வாய்க்கும் செய்திகள் இவ்வளவே! அவர் எப்படி மறைந்தார் -அடையாளம் எதுவும் இல்லாமல் அறை எப்படி வெறுமையாய் இருந்தது என்பவை பற்றியவை மெய்ப்பிக்க முடியாதவையாம்.

உடல் :

'உடல்', 'உடல் உறுப்பு' என்பவை ஓரொத்தவையாக இருத்தல் அரிது. அவ்வாறு ஓரொத்தவையாக அமையினும் அவற்றின் இயக்க நிலை, உணவு நிலை, உணர்வு நிலை, பேணல்