உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

153

நிலை, மரபு நிலை, வளர் நிலை இன்னவற்றால் ஓரொப்பாக இருப்பவை அல்ல.

ஒருவர் அருகே வரும் போதே வியர்வை நாற்றம், வாய் நாற்றம் முதலாயவை அருவறுப்பாக்கிவிடுகின்றன. சிலர் உடல் பூச்சு மணம், தடவு மணம், தெளிப்பு மணம் இல்லாமல் கூட அருவறுப்பாகத் தெரிவதில்லை. ஆயினும் என்ன?

எவ்வுடல் பிணமாகிவிட்டாலும் நாறாமல் இருப்பதில்லை எரியூட்டப்பட்டாலும் ஊன் எரிந்து கரியும் போது அவ்வெரி யுடன் வெளிப்படும் காற்றால் சில கல் தொலைவுக்கு எரியும் நாற்றம் பரவவே செய்கின்றது. சிலர்க்கு அந்நாற்றம் மயக்கத்தை ஆக்கிவிடலும் காண்பதேயாம்.

எரு

பாரிய கட்டை எண்ணெய் முதலியவை இட்டு எரித்தாலும் என்பின் எச்சம் இல்லாமல் ஒழிவது இல்லை. சூடம் எனப்படும் கர்ப்பூரம் எரிந்தாலும்-கலப்படம் இல்லாத கர்ப்பூரமாக இருந்தாலும் அது எரிந்த பின்னர் அவ்விடத்தில் கரி இல்லாமல் இருப்பதில்லை. 'கரி' என்பது எரிந்த இடம் என்பது காட்டும் சுவடு-அடையாளம். ஒளிவடிவானார், வெளி வடிவானார் என்பவை எல்லாம் மங்கல வழக்காகக் கொள்வதே வாழ்வியல் தெளிவாம்.

செத்தாரைத் துஞ்சினார் என்பதும் இடுகாட்டை நன்காடு என்பதும்

மங்கல வழக்கு என இலக்கணரால் கூறப்படும். அம்முறையிலேயே இறந்தாரை வீடுபேறடைந்தார், சிவகதியடைந்தார், கயிலாச பதவியுற்றார், வைகுண்ட பதவியடைந்தார், இறைவனடி அடைந்தார் என்பவை கருதுகோள் மொழிகளே அல்லாமல் காட்சி மொழிகள் அல்ல என்பது மெய்ம்மையாம்.

நோயரை அடியார் சிலர் நலப்படச் செய்த செய்திகள் உள. தமக்குள் எழுகின்ற எழுச்சி, தம் மதிப்புக்கு உரியார் காட்சி உரை முதலியவற்றால் ஏற்படுகின்ற எழுச்சி என்பவற்றில் ஏற்படும் ஆக்கங்கள் உண்டு. அதன் அடிப்படை 'நம்பிக்கை' ஆகும்.

என் இளந்தைப் பருவம் கடந்த பதினாறு, பதினேழு, பதினெட்டு அகவை அளவில் நூற்றுக் கணக்கான பேர்களின் தேள் கடியைக் குறைத்து இல்லாமல் போகச் செய்திருக்கிறேன். எந்த மந்திரமும் யான் சொன்னதில்லை. எந்த மாயமும் செய்ததில்லை.