உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

34ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

துண்டை வீசி - வேப்பிலை வீசி என் நினைவில் உள்ள பாடல்களை மெல்லெனச் சொல்லிச் சில நிமிடங்கள் சொல்ல வலி குறைந்தது என்றும் இல்லை என்றும் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

பேச்சி என்றும் ஓர் அம்மையார் தேள் கடியால் வாய் நுரை கக்கி மயங்கி உருண்டு கொண்டு கிடந்தார். யான் கால்மணிப் பொழுதுக்குள் இயல் நிலைக்கு அவர் வரக் கண்டு மகிழ்ந்தேன். மருந்து மட்டும் நோய் தீர்ப்பது இல்லை. மருந்து தருவார் மேல் உள்ள நம்பிக்கையும் நோயைத் தீர்த்தல் உலகறிந்த செய்தி.

மதிக்கத்தக்க சான்றோர், அடியார், துறவர், தூயர் ஆயோர் மேல் உலகம் மதிப்பு வைத்திருக்கிறது. அவர்கள் வருகை, வாழ்த்து, உரையாடல் முதலியவை இயற்கை ஊட்டமாய் அமைந்து எழுச்சியுறச் செய்கிறது. எல்லாம் தீர்ந்தது: இனி எத்துயரும் எந்நோயும் இல்லை என்னும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அதுவே நலமருந்தாகி விடுகின்றது. நம்பகத்தார், நம்பிக்கையாளர் இருவர் நிலை சார்ந்த தீர்வு இது.

கறந்த பால் மடியில் புகாமைபோலப் பிரிந்த உயிர் மீளவும் அக்கூட்டில் புகுவது இல்லை. சில வேளைகளில் அரிதாக ஒடுங்கி நிற்கும் உயிர் மீள இயக்ம் பெறுதல் உண்டு. அது போய்விட்ட உயிர் அன்று, இயக்கம் தடையுற்று அடங்கி நின்ற உயிர் அஃதாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்தல்' என்னும் ஒரு கலை பேசப்படு கிறதே! திருமூலர் வரலாறும், அருணகிரியார் வரலாறும் டுத்துக் காட்டப்படுகின்றனவே எனின், அதன் மெய்ம்மம் திருக்குறளால் தெளிவுறும்.

ஒருவன் என்றும், ஒருத்தி என்றும் இருப்பார் உயிரொன்றிய காதல் வாழ்வில் ஒருவராகி விடுகின்றனர். உயிர் பகுத்து இருந்த அவர் உயிரொன்றாகித் திகழ்கின்றார். ஒன்றி அன்பின் முளையாகிய மகவு பிறந்த போது அதனையே தம் உயிராகக் கொண்டு தளிர்க்கின்றனர். இந்நிலை கூடுவிட்டுக் கூடு பாய்தலாம்.

பறவைக் கூடு மட்டுமா கூடு? கூடு என்பது உடல் அல்லவா! கூடும் கூடும் இணைந்த நிலைதானே கூடல்! புலமைச் செல்வர்கள் கூடித் தமிழாய்ந்த இடம் கூடல் எனப்பட்டதும், பிரிந்த தலைவன் வருகையை அறிய அறிகுறியாகக் கொள்ளப்