உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன்

ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’

(3471)

'நலிதரு சிறிய தெய்வமென் றையோ

நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்

பலிக்கடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே

புந்திநொந் துளநடுக் குற்றேன்

கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்

157

கண்டகா லத்திலும் பயந்தேன்’

'துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்

தொடங்கிய போதெலாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்

கண்டகா லத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம் எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்

எந்தைநின் திருவுளம் அறியும்'

(3472)

(3473)

பிள்ளைப் பெரு விண்ணப்பத்தில் கொட்டிய அருள் மழையில் ஒரு பகுதியே இப்பாடல்கள் : இவையெல்லாம் 'இராமலிங்கம்' என்பாரையா காட்டுகின்றன? ஆருயிர் அனைத்துமாய் நின்ற அருட்பெரும் வள்ளலாராக அல்லவோ காட்டுகின்றன. இவை கூடுவிட்டுக் கூடு பாயும் உயிர்க்கு உயிராம். ஒரு தெய்வ வாழ்வாகத் திகழ்பவை தாமே!

-

காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்'

(3353)

'சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை

தங்கினேன் என்செய்வேன் எந்தாய்'

(3354)

'நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும்

நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த