உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் -34 ஓ

இன்னும் இதன் தனித்தனி விளக்கப் பேருரையெனக் கொள்ளத் தக்க பாடல்களையெல்லாம் தொகுப்பின் அத்தொகை எவ்வளவு பாரியதாய் அமையும்?

'எளியரை வலியார் அடித்தபோது ஐயோ

என்மனம் கலங்கிய கலக்கம்

தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்

களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான்

கடலினும் பெரியது கண்டாய்

அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை

அறிந்த என் நடுக்கம்ஆர் அறியார்'

(3463)

'என்புடை வந்தார் தம்முகம் நோக்கி

என்கொலே என்கொலோ இவர்தாம்

துன்புடை யவரோ இன்புடை யவரோ

சொல்லுவ தென்னையோ என்றே

வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்

அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம்

என்கொலோ என்றயர்ந் தேனே'

(3468)

'காணுறு பசுக்கள் கன்றுக ளாதி

கதறிய போதெலாம் பயந்தேன்

ஏணுறு மாடுமுதல் பலவிருகம்

இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்

கோணுறு கோழி முதற்பல பறவை

கூவுதல் கேட்டுளம் கலைந்தேன்

வீணுறு கொடியர் கையிலே வாளை

விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்'

(3469)

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்