உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

159

66

"இன்சுவை உணவு பலபல எனக்கிங்

கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்

நின்சுவை உணவென் நுண்கின்றேன் இன்னும்

நீதரு வித்திடில் அதுநின்

தன்சுதந் தரம் இங் கெனக்கதில் இறையும்

"இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம்

""

சம்மதம் இல்லை’

இச்சுகத் தால்இனி யாது

துன்புருங் கொல்லோ என்றுளம் நடங்கிச்

சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்"

உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி

(3394)

(3439)

உற்றநான் முதல்ஒரு சிலநாள்

பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்

பேருண வுண்டனன் சிலநாள் உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்

உறுவதற் கஞ்சினேன் உண்டேன்

மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள

மனநடுங் கியதுநீ அறிவாய்"

(3440)

இன்னவற்றால் வள்ளலார் கொண்ட ஊண் வெறுப்பையும், தாயர் முதலியவர் வருத்தம் தீர்க்க உண்டதையும் அறியும் போது ஊணிலே நாட்டம் கொள்ளா உண்மையை உணரலாம். ஆனால், பிறரோ பிறவுயிரோ ஊணின்றிக் கிடக்க நேர்வது கண்டு உருகிய உருக்கம் பனிமாலிமய உருக்கென்னச் சீவகாருணிய ஒழுக்கத்தின் வழி அறிய முடியும்.

பசி வாட்டி வருத்தும் கொடுமையையும், பசியாற்றினார் எய்தும் பேற்றையும் அவரைப் போல் விரித்து விளக்கி உரைத்தார் ஒருவர் இல்லை என்னும் அளவில் அவர் ஓங்கி நிற்றல் கண்கூடு.

வயிறரா உண்ண வழியின்றி இருப்பார் பசிக்குத் தரும் உணவு உணவு அன்று. அது, எப்பொருளை எவ்வாறு பாதுகாப்பாகச் சேர்த்து வைக்க வேண்டுமோ அப்படிச் சேர்த்து வைக்கின்ற பெரும்பயனை நல்குவது என்பார் திருவள்ளுவர்.

ாப

வள்ளலாரோ பசித்தோர்க்கு உதவும் ஈவு இரக்கமே வீட்டின் வாயிலைத் திறக்கும் திறவு கோல் என்பார்.