உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

நேற்றுக் கொன்றுவிட்டுச் சென்ற வறுமை இன்றும் வாட்ட வருமோ என்று ஏங்கும் வறியரைக் கூறுவார் திருவள்ளுவர். வள்ளலார் அவர்படும் ஏக்கத்தை எல்லாம் தாமே பட்டு வருந்துவார்போல எழுதும் எழுத்து, உயிரிரக்கப் பெருவெள்ளப் பெருக்கேயன்றி எழுதும் எழுத்தன்றாம்.

ஏழை எளியவரின் சாவாக்கலை எது? மரணமிலாப் பெருவாழ்வு எது? அதனை உணர்ந்து தாம் செய்யும் அளவில் நில்லாமல் பிறர்பிறரும் பசிப்பிணியாற்றும் அறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முழங்கி எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் அறச்சாலை நிறுவிய அண்ணலாரும் வள்ளலார்.

அம்மட்டோ நோயில்லா நெறி, நெடுவாழ்வு என்பவற்றை யெல்லாம் அவரைப்போல வெளிப்படுத்தி உரைத்தார் அரியர். மருத்துவம் என்பதைக் கரவாக வைத்துக் கொள்ளும் கலைபோல் தன்னலத்தார் சிலர் இருந்த காலத்தே குன்றின்மேல் இட்ட விளக்காக நேரிடையாகவும், கடித வழியாகவும், எழுத்து வழியாகவும் விளக்கிய பெருந்தகை உள்ளத்தார் வள்ளலார் :

ருவகை

மருத்துவம் உடல் நலம், உளநலம் குறித்தது. யாலும் வள்ளலார் பெரும்பணி ஆற்றியுள்ளார் : பின் வருவார்க்கும் வழிகாட்டியுள்ளார். அவ்வழிகாட்டுதலாய் அமைந்தவை அக்குறிப்புகள்

'மூலிகை குண அட்டவணை

டம்பெற்ற சிறு குறிப்புகள் (485)

.

என்னும் பட்டியலில்

சஞ்சீவி மூலிகைகள் என்றும் எழுதியுள்ளார்.

நித்திய கரும விதி பெரிதும் உடல் உளநலக் குறிப்பு களேயாம்.

உபதேசக் குறிப்புகளிலும், மடல்களிலும் மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள.

முத்தி அடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பதா தலால் எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி

பாதுகாத்தல் வேண்டும்.

ஜீவர்களுக்கு வாந்தி பேதி மாரடைப்பு முதலியவற்றால் நேரிடும் துர்மரணங்கள் ஆகாரக் குறைவாலும் மிகுதியாலும் அக்கிரம அதிக்கிரமத்தாலும் பொருந்தலாலும் வை போன்ற பல வகைக் கெடுதியாலும் உண்டாகின்றன.