உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

161

சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்கா திருக்கிற வஸ்துவைக் கொள்ளல் வேண்டும். புழுக்காத வஸ்துகள் யாவெனில் சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிர முதலிய பஸ்மம்.

நெய் பால் தயிர் மோர் - இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம்

தேக நஷ்டம் செய்வது உப்பு

சாதம் வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய்விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது தாமசகுணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்த்துக்களில் எண்ணெய் போகச் சுடவைத்துச் சாப்பிடுதல் வேண்டும்.

காலங் கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக் கெடுதி, குளிக்க வேண்டுமாகில் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

கரிசாலையை தினே தினே பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வர வேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும் உபதேசக் குறிப்புகளில் சில.

-

வை

தாம் தம்முடைய தேகத்தை சாக்கிரதையாக உபசரித்து வர வேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல்களில் மித போசனம் மித போகம்.

தாம் தேக முதலிய கருவிகளைச் செவ்வனிறுத்தி நடத்த வேண்டும் என்று எழுதுவது தவிர வேறொன்றும் எழுதுவது அவசியமாகத் தோற்றவில்லை.

-

இனி, ஈராண்டு பலவகைக் கருவிகளால் பதப்படுத்தி யேழைகள் பலர்க்கும் உபயோகிக்கும் பொருட்டு நம்மாட்டிருந்த பேருழப்பு ஓர் அசாக்கிரதையால் தன்மை கெடப்பெற்றது. இங்ஙனம் பெறினும் நம் பெருமான் திருவுளக் குறிப்பு அங்ஙனம் இருந்ததென்று கருதி அமைதி பெற்றாமாயினும், பிணிகளாற் பிணிப்புண்ட ஏழைகளைக் கருதும் போதெல்லாம் ஒரு சிறிது உளம்புடை பெயர்கின்றாம். ஆகலின் அப்புடை பெயர்ச்சியை ன்னும் இரண்டு மூன்று திங்களின் நீக்கப் பெற்று ஆண்டு அவசியம் வருவேம். யாம் வருமளவும் தேக முதலிய கருவிகளைக் கடைக் கணித்து வருக.

ம்