உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

இ வை திருமுகச் செய்திகளுள் சில.

ஒருவர்க்கு உடலில் கட்டியொன்று உண்டாக,

கொவ்வைச் சாறும் கோள்வெடி யுப்பும்

கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக: பூசுக உடைந்தபிற் பூரம் பூசுக

பாசுறு முருங்கைப் பட்டைச் சாற்றினில்

என எழுதுகிறார்.

சாகாக்கலை என்னும் மரணமிலாப் பெருவாழ்வு தாம் பெற்றாலும் பிறருறு துயர் தாங்காமையுடன் அவர் துயர் தீர்க்கும் பெருமுயற்சியும் அடிகளார்பால் இருந்தமை உணரத் தக்கதாம்.

ஒருவர் இயற்கை எய்தியது அறிந்து வருந்திய வள்ளலார் அது (இறப்பு) அரி பிரமாதிகளுக்கும் உள்ள காரியம்; ஆதலால் புதிதல்ல என்று துணிந்தேன் என்கிறார்.

சாதலும் புதுவது அன்றே

என்னும் புறநானூற்றுத் தொடரை நினைவூட்டுவது இது. இத்திருமுக முப்பிலே ஒரு பாடல் வைத்துளார்' (21)

அப்பாடல் :

'மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்

கண்விழித்து வயங்கும் அப்பெண்

உருவாணை உருவாக்கி இறந்தவரை

எழுப்புகின்ற உருவ னேனும் கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக்

கடித்துண்ணும் கருத்த னேல்எம் குருவானை எமதுசிவக் கொழுந்தாணை ஞானியெனக் கூறொ ணாதே’

என்பது.

ஆணைப் பெண்ணாக்கல்; பெண்ணை ஆணாக்கல்; இறந்தாரை எழுப்பல் -ஆகிய திறம் வல்லான் எனினும் என்கிறார். இவ்வாறு கூறல் பாவலர் மரபாக இருத்தல் தாயுமானவர் பாடல் முதலியவற்றால் அறியக்கூடும்.

இனி, பொதுமக்கள் வழக்கொன்றை எண்ணுதல் வேண்டும். அது, செயலற்றுக் கிடப்பானைச் 'செத்தபயல்' என்று வசை மொழிதல், மற்றொன்று, ஆழ்ந்து, எழுப்பவும் எழும்பாமல்