உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

163

இமையும் திறவாமல் கட்டைபோலக் கிடப்பானை அடித்துப் போட்டுச் செத்தவன் போல என்று கூறுதல்.

திருக்குறளில் பின்னது, “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்"

என ஆளப்பட்டுள்ளது.

துஞ்சுதல் ஆழ்ந்த உறக்கம் என்பதையும், இறத்தல் என்னும் பொருளையும் தரும்.

66

"துஞ்சு துயில் கொள்ள”

என்னும் மணிமேகலைத் தொடரும், கூடகாரத்துத் துஞ்சிய, காரியாற்றுத் துஞ்சிய என்பவை முதலாக வரும் புறப்பாடல் பாட்டுடையார் பெயர்களும் காட்டும்.

இவற்றொடு செத்தாரை எழுப்புதல் என்பதை எண்ணினால், செயலற்றுக் கிடப்பாரைத் தூண்டி வீறுபெறச் செய்தல் செத்தாரை எழுப்புதல் ஆகும்.

விவேகானந்தர், "எழுமின்! விழிமின்! குறிதவறாது சென்மின்!" என வீறுடன் முழங்கி இளையரையும் வளர்ந்த வரையும் முதியரையும் மகளிரையும் துறவரையும் தட்டி எழுப்பியமையை அவர் உயிர்ப்புமிக்க பொழிவுகளால் உணரலாம்!

வள்ளலார்,

“செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்தது” “மடம் பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார் திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம் தினம்’

"துஞ்சிய மாந்தரை எழுப்புக! நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக”

“செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம் ஒத்தாராய் வாழ்க உவந்து”

""

என்னும் வள்ளலார் வாக்குகள் என்ன சொல்கின்றன?

சன்மார்க்கி சாகான்; சாவவன் சன்மார்க்கி ஆகான் என்னும் கொள்கையை முன் வைக்கும் வள்ளலார் கூறிய இவை சன்மார்க்கம் சார்ந்தார் இறவார் என்பதையே கூறுகின்றன.

மடம் பெற்ற மனிதர்கள் மதிபெற்றுத் திடமாகச் செயலாற்றல் இழந்த பேற்றை மீளப் பெற்ற பேறு ஆகும் அல்லவோ!