உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

திரு.வி.க. அவர்கள் கூறிய "சித்தம் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்" என்பது என்ன?

"சித்தம் திருந்தாமை சாவு

"சித்தம் திருந்துதல் பிறப்பு" என்பதை அறிதல் “செத்தார் எழுவர்" என்பதற்கு நல்ல விளக்கமாம்.

சாகாக்கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு என்பதன் திரட்டு என்ன?

உலகம், நிலையாமை, நிலைபேறு என்னும் இரண்டையும் உடையது. ஆக்கம் கேடு என்னும் இரண்டும் அமைந்தது. இவ்வுலகில் ஆக்கம் பற்றி நின்று அழியா வாழ்வு பெறக்கூடும். பூத உடல் மறைந்தாலும் அழிந்தாலும், மறையாத அழியாத புகழ் உடல் இறவாப் பெருநிலை இறைமை வாழ்வு! அதுவே "இறை தானாய், தான் இறையாய் நிற்கும் நிலைபேற்று வாழ்வு என்பதாம். மேலும் செயலற்றுக் கிடப்பாரும் தீமையில் உழல்வாரும் கிளர்ந்து செயலாற்றலும் திருந்தி வாழ்தலும் செத்தார் எழுதலும் என்க.

திரு.வி.க காட்டும் ஓர் ஓவியம்:

“தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாபோல் மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழ்ந்தவன் எல்லா உயிரிலும் இருக்கை பெற்றவன் எல்லாம் தன்னுள் இருத்தலைப் பார்த்தவன் ‘தன்னுயிர் மன்னுயிர்’ ‘மன்னுயிர் தன்னுயிர்’ என்ற உண்மையில் நின்றவன்"

அருகன் அருகே.(147-152)