உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

167

இதுகாறும் அறிந்தவற்றால், இடைவிடாது பல்கால் பயிலுதலும், கூறுதலும் ஓதுதல் என்பதாம் எனத் தெளியலாம்.

பயில்வான் :

-

பயிலுதல் என்பதொரு சொல். அது பயிற்சி என்பதுமாம். ஒரு முறை செய்வதோடு அமையாது, பலகால் செய்து படித்து- பழகுதல் பயிலுதலாம் வண்டியோட்டுதல் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, கணினிப் பயிற்சி, நீந்துதல் தாவுதல் ஓடுதல் முதலாம் விளையாட்டுப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, இசைப் பயிற்சி, பொழிவுப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி என எண்ணுங்கள்! எத்தனை எத்தனையோ பயிற்சிகள், உங்கள் எண்ணத்தில் வளைய வளைய வருதல் காணலாம். பயிற்சி ஒரு முறை செய்ததுடன் நிற்பதன்று; பல்கால் தொடர்ந்து பலநாள் செய்வதே பயிற்சியாம். பயிற்சி யாலேயே பெயர் பெற்றார் ஒருவர், அவர் ஓதுவார் போன்றவர். பயில்வான் என்னும் பெயர் பெற்றவர்.

களரிப் பயிற்சி :

விளையாட்டுப் பயிற்சி, களரிப் பயிற்சி என்பவற்றில் தேர்ந்த ஆசான் பெயர் பயில்வான். ஓயாது ஒழியாது பயின்று கொண்டே இருத்தலால் பயிற்றும் தொழிலேற்ற அவர் என்றும் 'பயில்வான்' ஆக விளங்குகிறார். பயின்றார், பயில்கிறார் எனினும், 'பயில்வான்' என்றே பெயர் பெற்றுத் திகழ்கிறார். களரிப் பயிற்சி செய்யும் அவையங்கள் பல கம்பன் காலத்து இருந்தமையாலும், இளைஞர்கள் அக்களங்களில் பயின்றமை யாலும்,

'கந்தனை அனையவர் கலைதெரி கழகம்’ எனப்பாடு புகழ் பெற்றது.

சங்க காலத்தே பெருநற்கிள்ளி என்பான் ஒரு சோழவேந்தன் இருந்தான். அவன் அரிய பயிற்சியாளன்; ஆடல் களம், போர்க் களம் ஆகியவற்றில் பெரும்பங்கு கொண்டான். நாடு போற்றும் புகழாளனாகத் திகழ்ந்தான். அதனால் அவன், போரவைக்கோ எனப் பட்டம் பெற்றான். அவனைப் புகழ்ந்து பாடிய புலமையர், போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்றனர். அவன், செருக்குற்று வந்த ஆமூர்மல்லன் என்பானை, களரியிலே வளைத்து வாட்டிய அருமையை நக்கண்ணையார் என்னும் புலமைச் செல்வியார் பாடிய பாடல் புறநானூற்றில் புகழ்வாழ்வு கொண்டு திகழ்கின்றது!