உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

பன்னுதல் :

இளங்குமரனார் தமிழ்வளம் -34 ஓ

கூறுதல், சொல்லுதல், இயம்புதல், இசைத்தல், நவிலுதல் என்பன வெல்லாம் சொல்லுதல் என்னும் பொருள் தருவன. எனினும், தனித்தனிச் சிறப்புப் பொருள் கொண்டவை. இவ்வாறே பல்கால் சொல்லுதல், மீளமீளச் சொல்லுதல் பன்னுதல் எனப்படும். ஏன் பன்னிப்பன்னிப் பேசுகிறாய் என்பது மக்கள் வழக்கு.

இவற்றால் ஓதுதல், பயிலுதல், பன்னுதல் என்பவை ஒரு முறையுடன் நில்லாமல் பன்முறை கொள்ளும் தொடர் முயற்சியைக் குறித்தல் விளக்கமாம். ஆதலால், ஓதுதல் என்பது படித்தல் எனப்படாமல், பல்கால் படித்தல் எனப் பொருள் கொள்ளப்பட வேண்டிய சொல்லாகும் என்பதைத் தெரிதல் வேண்டும்.

கல்வி முறை :

கல்வி பற்றிய பல விளக்கங்களை நன்னூல் இலக்கணம் நம்முன் வைக்கின்றது. கற்றல், கற்பித்தல், நூல், முறையோதல் என்பன பற்றி யெல்லாம் அது சொல்கின்றது.

“ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்

பெருக நூலில் பிழைபா டிலனே

முக்கால் கேட்பின் முறையறிந் துரைக்கும்

ஆசான் உரைத்தவை தமைவரக் கொளினும்

காற்கூ றல்லது பற்றலன் ஆகும்

அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்

செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்

மையறு புலமை மாண்புடைத் தாகும்.

என்பவை, கற்பவை பற்றிய சில நூற்பாக்கள் (42-45)

ஒருமுறையுடன் அமையாமல் இருமுறை பாடம் கேட்டால் நூலில் பெரும்பாலும் பிழையில்லாமல் அறிதல் கூடும். அதனை, மூன்று முறை கேட்டால், கேட்டவன் தானேயும் பிறர்க்குச் சொல்லும் முறை அறிந்து சொல்லவல்ல தேர்ச்சியும் பெறுவான். எனினும், ஆசிரியன் உரைத்த பாடத்தை அமைந்து மனங்கொளக் கேட்டாலும் கேட்டவற்றில் கால்பங்கே உளங்கொள வாய்க்கும். தம்மைப் போல் பாடம் கேட்ட மாணவரொடு சேர்ந்து படித்தலால் கால் பங்கும் கற்றதைப் பிறர்க்கு எடுத்துரைத்தலால்