உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

169

அரைப்பங்கும் ஆக முழுப்பங்கும் பெற வாய்க்கும் என்பது இந்நூற்பாக்களின் பொருளாம்.

இப்பாடலில், முக்கால் கேட்டல் என்பது பல்கால் கேட்டலாம். ஒன்றல் பல என்பது தமிழ்நெறி.

பாடம் கேட்கும் முறையை,

“செவிவாய் ஆக நெஞ்சு களன் ஆகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்து”

என்கிறது அந்நன்னூல்.

வாயால் உண்டு வயிற்றில் சேர்க்கும் ஊண்முறைபோலச் செவியால் கேட்டு நெஞ்சமாம் களஞ்சியத்தில் கல்வியாம் மணியைச் சேர்த்துப் பயன்பெறல் வேண்டும் என்பது இதன் பொருள்.

மேலும் பாடம் கேட்பவன் இயல் எப்படி இருக்க வேண்டும் எனின், “பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி” என்னும் அந்நன்னூல். நீர் வேட்கையுடையான் அவ்வேட்கை தணிக்கவும், பசிமிக்கோன் அப்பசி தீர்க்கவும் எவ்வாறு விரும்புவானோ அவ்வாறு கல்வியை விரும்பிக் கற்க வேண்டும் என்பது அது. கற்கும் திறம் :

ஆர்வத்தால் கேட்பானும் ஒருமுறை கேட்ட அளவில் முழுதுறக் கற்க இயலாமை ஏன் எனின், அறிவுக் கூர்ப்பு ஒரே வகையாய் அனைவர்க்கும் அமைவது இல்லை. பெற்றோர் நிலை, சூழல்நிலை என்பனவும் ஒன்றாயிருப்பதில்லை. ஆதலால், கற்றுக் கொள்ளும் திறமும் ஒன்றாய் அமைவது இல்லை என்க.

பாடம் ஒன்று; கற்பிப்பாரும் ஒருவர்; ஆயினும் அவர் கற்பிப்பதைப் பெறும் மாணவர் பலரும், பலவகையில் இருத்தலைக் காணின் இது தெளிவாகும்; தேர்வு வைப்பின் அவர்கள் மதிப்பெண் ஒப்பப் பெறாமை இதனை நன்கு வெளிப்படுத்தும்.

திரி விளக்கு :

அகல் விளக்கில் -குத்து விளக்கில் - திரிகள் போட்டு எண்ணெய் விட்டு எரியூட்டினால், அத்திரிகளுள் ஈரம்பட்ட திரியொன்று இருந்தால், அது மற்றைத் திரிகளைப்போல்