உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

உடனே பற்றி எரியாது; அரிதில் பற்றிக் கரிந்தும் எரியும். அதுபோல், சிலர் மந்த நிலை, கேட்டவை கேட்டவை உளங்கொள இயல்வது இல்லை. இதனை, இன்னிசை இருநூறு என்னு நூல்,

ஈரத் திரியின் இருந்தகளி நெய்த்திரியில் சாரும் தழலொப்ப நூற்பொருள் சாருமால் என்று கூறும் (102)

தீப்பற்றல் :

சூடத்தில் பற்றும் தீ, கரியில் பற்றும் தீ, வாழைத் தண்டில் பற்றும் தீ மூன்றும் எரிநிலையில் வேறுபடுதலை, கர்ப்பூர அறிவு, கரி அறிவு, கதலி அறிவு என முத்திறப்படுத்திக் கூறுவது உண்டு. அறிவைப் பெற்றுக் கொள்ளும் மாணவர் திறங்கொண்டு தலைமாணாக்கர், இடைமாணாக்கர், கடைமாணாக்கர் எனப் பாகுபடுத்திப் பார்த்தல், எடுத்துக் காட்டுடன் நன்னூலில் காணலாம்.

"அன்னம் ஆவே; மண்ணொடு கிளியே; இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர் தலை இடை கடைமா ணாக்கர்”

என்பது அது.

மன்ணொடு கிளி, இடைமாணாக்கர்;

அன்னமும் ஆவும், தலைமாணாக்கர்;

(இல்லிக்குடம் (ஓட்டைக்குடம்) ஆடு, எருமை, நெய்யரி, கடைமாணாக்கர்) என்று உவமைப்படுத்திக் காட்டியது அது. அன்னம் முதலியன உவமையாகும் வகையை ஆங்குக் காண்க.

நன்னூலார் கூறிய மும்முறை கேட்டலை, இருமுறை கேட்டலாக்கினார் ஒளவையார். ஒரு வெண்பாவை இருமுறை கேட்ட அளவில் ஒப்பித்தல் வேண்டும். அதனை எழுத்து வடிவில் ஒரு முறை பார்த்துவிட்டால் தவறாது எழுதுதல் வேண்டும் என்பது அவர் கருத்து. அதனை,

"வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானை”

என்பார்.