உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம்

34

ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்விதானே ஏழு பிறப்பினும் ஏமமாதலை உடைத்து என்றவாறு என்பது மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய இருவர் உரையுமாம்.

இது, வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமாறு என்பது என்றது இக்குறளுக்கு இவர்கள் தரும் மேல் விளக்கம். ஒரு பிறப்பிலே கற்ற கல்வி ஏழு பிறப்புக்கும் உதவும் என்றவாறு என்பது பரிதியார் உரை.

ஒரு பிறப்பின்கண் நல்வழிக்குரிய கல்விகளைத் தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனேதான் கற்ற கல்வியானது அங்ஙனம் கற்ற ணையிறந்த இறைவற்கு இம்மைக்கண் உளதாம் நீதிப் பொருளாகிய இன்ப உறுதியேயன்றிப் பின்பு நிகழும் மறுமையாகிய இனிய சேம உறுதியை உடைத்து என்றவாறு என்பது காலிங்கர் உரை.

பரிமேலழகர், ஒருவனுக்குத் தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி எழுபிறப்பினும் சென்று உதவுதலையுடைத்து என்றவாறு,

வினைகள் போல உயிரின்கட்கிடந்து ஒது புக்குழிப் புகுமாகலின் எழுமையும் ஏமாப்புடைத்து என்றார். எழுமை மேலே கூறப்பட்டது. உதவுதல் நன்னெறிக்கண் உய்த்தல் என உரையும் விளக்கமும் வரைகிறார்.

மேல் என்றது எழுபிறப்பும் தீயவை தீண்டா என்னும் குறளில் (62) ஆகும்.

வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின் கண்ணும் என்று எழுபிறப்பு என்பதற்கு உரை கூறி விளக்கம் செய்தார். அப்பாடலில், ஒருமைச் செயலாற்றும் பேதை என்பதில் வரும் ஒருமைக்கு, இவ்வொரு பிறப்புள்ளே என்றே உரை எழுதினார் பரிமேலழகர். பிறரும் அவ்வாறே எழுதினர் (835) ஆனால், ஒருமை மகளிரே போல

என்னும் குறளில் வரும் ஒருமைக்கு, கவராத மனத்தினை யுடைய மகளிர் என உரைகின்றார் (974). கவராத என்பது பிரிவு - பிளவு - படாத ஒருமுகப்பாடு என்னும் பொருள் தருவதாம் (974). ஒருமை :

கால் நடக்கிறது; கண் பார்க்கிறது; எங்கோ பார்த்துக் கொண்டு, எங்கோ நடந்தால் நடை என்னாகும்?