உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வள்ளலார் கண்ட சாகாக்கலை

"மனம் போன போக்கெல்லாம் போக வேண்டா"

"சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ

நன்றின் பால் உய்ப்ப தறிவு’

173

என்பவை மனத்தை ஒருமைப்படுத்திச் செலுத்துதலே சுட்டுவவாம். வானிலே பறந்து வரும் பறவைக்குக் குறிபார்க்கிறான் ஒருவன். அவன் நிற்பது கீழே; அது பறப்பது மேலே. அதுவும் நிற்கும் பறவை அன்று; பறந்து வருவது. அதற்குக் குறி வைப்பது என்றால், பறவை வருமிடமும் அம்பு செல்லுமிடமும் அல்லது துமிக்கிக் குண்டு சேரும் இடமும் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவோ! அவன் எண்ணமெலாம் ஒருமுகப்பட்டு அல்லவோ செயல்புரிகின்றன! எங்கோ பார்த்து எங்கோ செயல்படுதல் என்

பயணம்?

இயற்கையே,நமக்கு ஒருமுகப்படுதலைக் கற்பித்துக் கொண்டே உள்ளது! கண்ணிரண்டு எனினும் இரட்டை பார்வை இல்லையே! காதிரண்டு எனினும் இரட்டைக் கேள்வி இல்லையே! இவ்வாறு தானே நா இரண்டு, நுரையீரல் இரண்டு, குடல் இரண்டு என்றாலும் ஒருமுகப்பட்டுச் செயல்படுகின்றன அல்லவோ! அவ்வாறு ஒருமுகப் பார்வை, ஒருமுகக் கேள்வி என்பவையே ஊன்றி நிற்க உதவும். எதையோ எண்ணிக் கொண்டு எதையோ செய்வது பயன் தராது; இடரும் தரும்.

குறிக்கோள் :

குறிக்கோள் என்பது என்ன? ஒரு குறியையே உறுதிப் பிடியாகக் கொண்டு நடப்பதே குறிக்கோள் என்பதாம். ஒரு முகப்பட்டுச் செயல் புரியும் எதுவும் வெற்றிக்கு மூலமாம்.

ஒருவர்க்கு ஒரு குறிக்கோள் தானா உண்டு? ஒரே செயல்தானா உண்டு? எனின், எக்குறிக்கோளில் அல்லது எச்செயலில் ஈடுபடுகிறோமோ அப்பொழுதில் அதுவாகவே ருத்தல் முழுதுற ஒப்படைத்தல் வேண்டும் என்பதாம்.

விவேகானந்தர் பள்ளியில் பயின்றபோது நடந்ததொரு நிகழ்ச்சி. ஆசிரியர் பாடம் தொடங்கினார்; ஆனந்தர் கண்களை மூடினார்; ஆசிரியர் பாடம் முடித்தார்; ஆனந்தர் மூடிய கண்களைத் திறந்தார்.

ஏன் பாடம் தொடங்கியதும் கண்ணைமூடி, பாடம் முடித்ததும் கண்ணைத் திறந்தாய்! உறங்கினாயா? என்றார் ஆசிரியர்.